TamilSaaga

“ஜூரோங் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ” : விரைந்து வந்த SCDF – காத்திருந்த அதிர்ச்சி தகவல்

சிங்கப்பூர் ஜூரோங் மேற்கில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் தனது படுக்கையறையில் இறந்து கிடந்தார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் தீ ஒரு தனிப்பட்ட இயக்க கருவியிலிருந்து (PMD) மின் தோற்றம் கொண்டது என்று தெரியவந்துள்ளது.

SCDF இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு பிளாக் 978 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93ன் ஐந்தாவது மாடியில் தீ பற்றி எறிவது குறித்து ஒரு எச்சரிக்கையை பெற்றது. SCDF அதிகாரிகள் அங்கு வந்தபோது ஒரு முனைக்கு வெளியே ஒரு ஓரத்தில் இரண்டு பேர் நிற்பது தெரிந்தது என்று SCDF தெரிவித்தது. உடனைடியாக தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்பதற்காக அந்த குடியிருப்பின் படுக்கையறைக்குள் புகுந்தனர்.
மற்றொரு படுக்கையறையில் பரவிய தீயை, ஒரு வாட்டர் ஜெட் மூலம் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். அந்த படுக்கையறையில் ஒரு 22 வயது இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்.

SCDF வெளியிட்ட முகநூல் பதிவு

SCDF துணை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும் SCDF அங்கு வருவதற்கு முன்பு 24 வயது உடைய மயக்கமடைந்த நபர் ஒருவர் அந்த பிளாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மற்றும் அவருக்கு ஏற்பட்ட தீக்காயங்களால் அவர் உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சுமார் 60 குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு தீயணைப்பு வீரர்கள் வெப்பச் சோர்வை அனுபவித்ததாக துணை மருத்துவர்களால் மதிப்பிடப்பட்டு என்ஜி டெங் பாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Related posts