TamilSaaga

பேராசை! சிங்கப்பூரில் தனது சம்பளத்தை அதிகமாக காட்ட payslips-ல் மோசடி – Citibank-யே கிறுகிறுக்க வைத்த “பலே” ஊழியர்

தற்போது உலக அளவில் பிரபலமாகி வரும் பல விஷயங்களில் Bitcoinனும் ஒன்று, ஒரே இரவில் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் அடுத்த நாளே பல்லாயிரம் கோடிக்கு அதிபதியாகும் வாய்ப்பினை இந்த Bitcoin தந்துள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் சிங்கப்பூர் பிட்காயின் வாங்குவதற்காக அதிக வரம்புடன் கிரெடிட் கார்டைப் பெறுவதற்காக தனது ஊதியச் சீட்டுகளை போலியாக உருவாக்கிய நபருக்கு இன்று புதன்கிழமை (பிப்ரவரி 9) ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

“தமிழ்னு நேரடியா சொன்ன குறைஞ்சுடுவிங்களா?” : சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளை விமர்சித்த அமெரிக்க youtuber – வச்சு செய்த சிங்கப்பூரர்கள்

Lin Mingzhong, 48, அவரது கிரெடிட் கார்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை மற்றும் இறுதியில் திவாலானதாக அறிவித்தார். இது வங்கியின் உள் விசாரணைகளுக்கு வழிவகுத்தது, மேலும் அது அவரது குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. ஏமாற்றியதற்காக அவர் மீது கடந்த மாதம் சுமத்தப்பட்ட ஒரு மோசடி குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். லின் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் சில கூடுதல் வருமானத்தை பெற எண்ணி ஆன்லைன் கிரிப்டோகரன்சி வர்த்தக தளத்தில் பிட்காயினில் முதலீடு செய்யத் தொடங்கினார். பிட்காயினை வாங்குவதற்கு அதிக நிதியைப் பெற பல்வேறு வங்கிகளில் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார். (இன்றைய தேதியில் ஒரு Bitcoinனின் விலை இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம்)

மார்ச் 2020ல், அவர் சிட்டி பேங்கில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார். அவர் அந்த நேரத்தில் சிங்கப்பூர் பசுமைப் பொறியாளர்களுடன் பணிபுரிந்தார், அவருடைய மாத மாதச் சம்பளம் S$6,000. இருப்பினும், கிரெடிட் கார்டு விண்ணப்பத்தில் இந்த வருமானத்தை அறிவிப்பதற்குப் பதிலாக, 2019 அக்டோபரில் தனது முன்னாள் முதலாளியான மீடியாகார்ப் நிறுவனத்திடமிருந்து அவர் பெற்ற பேஸ்லிப்பை இவர் பயன்படுத்தியுள்ளார். அந்த பேஸ்லிப்பில் அவருடைய மாதச் சம்பளம் S$8,100 எனக் காட்டியது.

லின் ஊதியச்சீட்டின் இரண்டு நகல்களை உருவாக்கி, ஜனவரி 2020 மற்றும் பிப்ரவரி 2020ல் சிங்கப்பூர் பசுமைப் பொறியாளர்களால் அவருக்கு வழங்கப்பட்டதாகத் தோன்றும் வகையில் அவற்றைத் திருத்தினார். அவர் தனது கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை இந்த போலியான பேஸ்லிப்களுடன் சமர்ப்பித்து, சிட்டி வங்கியை அவர் நினைத்தவாறே வெற்றிகரமாக ஏமாற்றி அவருக்கு கிரெடிட் கார்டில் S$32,400 வழங்கும் அளவிற்கு வரம்பை பெற்றார். இதுவே லின் தனது உண்மையான மாத வருமானத்தை அறிவித்திருந்தால், அவருடைய கடன் வரம்பு S$24,000 ஆக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் சிங்கப்பூர்… புங்கோல், ஜூரோங்கில் டிரைவர்கள் இல்லா வாகனங்கள் – வியக்க வைக்கும் முயற்சி!

கிரெடிட் கார்டைப் பெற்ற பிறகு, லின் உடனடியாக அதைப் பயன்படுத்தி S$31,472.13 மதிப்புள்ள பிட்காயினை மார்ச் 26, 2020 அன்று eToro தளத்தில் வாங்கினார். இந்தத் தொகைக்கு அவர் எந்தப் பணமும் செலுத்தவில்லை, மேலும் சிட்டிபேங்க் அவரது கார்டை ஜூன் 15, 2020 அன்று ரத்து செய்தது. ஆகஸ்ட் 17, 2020 நிலவரப்படி, கார்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை S$33,638.95 ஆகும், இதில் வட்டியும் அடங்கும். நீதிமன்ற ஆவணங்களின்படி, லினின் மோசடிகளால் சிட்டி வங்கி S$9,638.95 இழப்பை சந்தித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

இறுதியில் லின் தனது கிரெடிட் கார்டு கடனைச் செலுத்தத் தவறியதை சிட்டி பேங்க் விசாரித்து, சிங்கப்பூர் பசுமைப் பொறியாளர்களிடம் அவரது சம்பளம் குறித்துச் சரிபார்த்த பிறகு அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts