TamilSaaga

“தமிழ்னு நேரடியா சொன்ன குறைஞ்சுடுவிங்களா?” : சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளை விமர்சித்த அமெரிக்க youtuber – வச்சு செய்த சிங்கப்பூரர்கள்

அமெரிக்க யூடியூபர் கிறிஸ் ரானே என்பவர் வெளியிட்ட சிங்கப்பூர் guide வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. Yellow productions என்ற youtube சேனலை நடத்தி வரும் அவர் சுற்றுலா சம்மந்தமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். கடந்த பிப்ரவரி 1, 2022ல் தான் இந்த வீடியோ Facebookல் பதிவேற்றப்பட்டாலும், உண்மையில் அந்த கிளிப் 2016ல் YouTube பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் சிங்கப்பூர்… புங்கோல், ஜூரோங்கில் டிரைவர்கள் இல்லா வாகனங்கள் – வியக்க வைக்கும் முயற்சி!

அந்த நான்கு நிமிட வீடியோவில் வானிலை, மொழி, உணவு மற்றும் போக்குவரத்துக்கான உதவிக்குறிப்புகளை பற்றி தகவல்கள் அடங்கியிருந்தது. மலிவான பொதுப் போக்குவரத்து மற்றும் சிறப்பான உணவு வகைகளுடன் சிங்கப்பூரை ஒரு பாதுகாப்பான ஆனால் ரொம்பவும் கண்டிப்பான நாடாக ரானே அந்த காணொளியில் வெளிப்படுத்தினர். எல்லாம் சுமுகமாக சென்றுகொண்டிருந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள நான்கு அதிகாரப்பூர்வ மொழி என்று கூறி அவர் பேசிய விஷயங்கள் தான் சிக்கலை ஏற்படுத்தியது.

அவர் கூறியது பிவருமாறு “சிங்கப்பூரில் ஆங்கிலம், மாண்டரின், மலாய் மற்றும் ஒரு இந்திய மொழி உள்ளிட்ட நான்கு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ மொழியாம் ஆங்கிலத்தை இங்குள்ள அனைவரும் நன்றாக பேசுவதை நீங்கள் காணலாம்”. ஆனால் கேள்வி என்னவென்றால், உங்களுக்குப் அந்த ஆங்கிலம் புரியுமா என்பது தான். இவர்கள் பேசும் ஆங்கிலம் சிங்கலிஷ் என்று கூறப்படுகிறது. அதில் ஆங்கிலம் பத்தி சீன மொழி பாதி என்று சேர்த்து பேசப்படுகிறது” என்று அவர் அதில் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து தான் சுமார் 5 ஆண்டுகள் கழித்து தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. சிங்கப்பூரில் பேசப்படும் இந்திய மொழி தமிழ் தான். அதை தமிழ் என்று நேரடியாக குறிப்பிடலாமே, அது என்ன ஒரு இந்திய மொழி என்று பேசுகிறீர்கள் என்று ஒரு சாரார் அவரை வறுத்தெடுக்க. சிங்கலிஷ் என்பது ஆங்கிலத்துடன் 4 தேசிய மொழிகள் கலந்து பேசப்படும் ஒரு மொழி என்று இதில் என்ன தவறு உள்ளது என்று கூறிவருகின்றனர்.

சிங்கப்பூரில் 2 வயது குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிய “அதிர்ஷ்ட” தாய்க்கு “50 லட்சம்” லாட்டரி பரிசு – Lazada குலுக்கலில் சுவாரஸ்ய சம்பவம்!

மேலும் அந்த வீடியோவில் சிங்கப்பூர் வருபவர்கள் அதிக அளவில் கையில் பணம் வைத்திருக்க வேண்டும் என்றும். இங்கு வெகு சில இடங்களில் மட்டுமே கிரெடிட் மற்றும் இதர வகை கார்டுகள் பயன்பாட்டில் இருப்பதாக கூறினார். ஆனால் அதற்கும் பல நெட்டிசன்கள் அவரை சாடியுள்ளார். அதே நேரத்தில் நீங்கள் சிங்கப்பூர் குறித்து சொல்லும் சில விஷயங்கள் வரவேற்கதக்கது தான் என்று பாராட்டியும் வருகின்றனர். குறிப்பாக அவர் சிங்கப்பூரை பாதுகாப்பான நாடு என்று கூறியதற்கும் சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன என்று கூறியதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts