TamilSaaga

“நான் ஒரு மகப்பேறு மருத்துவர்” : அந்தரங்க படங்களை கேட்ட நபரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் போலீஸ்

சிங்கப்பூரில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 11) மகப்பேறு மருத்துவராகப் தன்னை அடியாளப்படுத்திக்கொண்டு, “ஆராய்ச்சி நோக்கங்களுக்காக” ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் புகைப்படங்களை தனக்கு அனுப்பச் சொன்னதாகக் கூறிய வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 24 அன்று, அந்த நபர் ஒரு மருத்துவமனையில் மகளிர் மருத்துவ நிபுணராக நடித்து, பாதிக்கப்பட்டவரை, “பெண்களின் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” பிரச்சாரத்தில் கலந்துகொள்ள அழைத்ததாக காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த நபர் தன்னை ஒரு மகளிர் மருத்துவ நிபுணராக பிரதிநிதித்துவப்படுத்த “பேஸ்புக்” கணக்கு ஒன்றை உருவாக்கி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் “மருத்துவ நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக” அந்த பெண்ணுடைய பிறப்புறுப்பின் புகைப்படங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து கடந்த வியாழக்கிழமை அவனை கைது செய்தனர். “முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இதே போன்ற வேறு சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது. குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன” என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார். மற்றொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்வது கடுமையான குற்றம் என்றும், சட்டத்தை அப்பட்டமாகப் புறக்கணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் காவல்துறை பொதுமக்களை எச்சரிக்க விரும்புகிறது” என்று SPF தெரிவித்துள்ளது.

Related posts