TamilSaaga

அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் சிங்கப்பூர்… புங்கோல், ஜூரோங்கில் டிரைவர்கள் இல்லா வாகனங்கள் – வியக்க வைக்கும் முயற்சி!

தானியங்கி வாகனங்களை (AVs – Automated Vehicles) பெரிய அளவில் ஏற்றுக்கொண்டால் நமது சிங்கப்பூர் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்? என்று எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா?.

சிங்கப்பூரின் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் (URA) கடந்த ஜனவரி 13 அன்று தொடங்கப்பட்ட கண்காட்சியில், நகர நிலப்பரப்பு எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய பல சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. சிங்கப்பூர் அதன் நீண்ட காலத் திட்டத்தை மதிப்பாய்வு செய்யும் போது, ​​AV போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வாறு “நமது பயணத்தை மாற்றியமைக்கும்” என்பதைக் கருத்தில் கொள்வது சரியானது என்று தேசிய வளர்ச்சிக்கான மாநில அமைச்சர் டான் கியாட் ஹவ் கூறினார்.

“சிங்கப்பூரில் நடந்த கொடூரமான வழக்குகளில் இதுவும் ஒன்று” : கெஞ்சியும் கேட்காமல் கற்பழித்த நபர் – காதலிக்கு நேர்ந்த கொடூரம்

“AV தொழில்நுட்பம் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், இன்னும் அதற்கான ஆரம்ப கட்ட நிலையில் தான் நாம் உள்ளோம். சிங்கப்பூரில் AV இயக்கத்தின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலையை உறுதிசெய்ய சோதனைகளை தொடர்ந்து நடத்துவோம்.

அதிலிருந்து AVகள் நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எதிர்கால நகரத்தை உருவாக்கத் திட்டமிடுவோம்,” என்று அவர் கூறினார். சிங்கப்பூரில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும், உணவை வழங்குவதற்கும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் ஏராளமான AV சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் “Courier-களாக” செயல்படும் இரண்டு தானியக்க மொபைல் ரோபோக்கள். இவை சிங்கப்பூரின் புங்கோலில் கடந்த ஓராண்டாக டோர் டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள இந்த கோவிட்-19 சூழலில் நாம் நமது எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது இதுபோன்ற தொடர்பு இல்லாத விநியோகங்கள் முக்கியத்துவம் பெறும்” என்றும் டான் கூறினார். டெலிவரி AVகள் ஆர்டர்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், பாரம்பரிய உணவு விநியோக சேவைகளை விட AV சேவைகளும் மலிவானதாக இருக்கும் என்று கான்டினென்டல் பிரதிநிதி Mothership-யிடம் கூறினார்.

சிங்கப்பூரில் 2 வயது குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிய “அதிர்ஷ்ட” தாய்க்கு “50 லட்சம்” லாட்டரி பரிசு – Lazada குலுக்கலில் சுவாரஸ்ய சம்பவம்!

“சிங்கப்பூரை பொறுத்தவரை AVகள் இன்னும் ஒரு புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான். ஆனால் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” URA-ன் குழு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் சியு வென் துங் கூறினார்.

AV-கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பயன்படலாம் என்றும் URA கூறியது. அதே நேரத்தில் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் AVகள் பயன்படுத்தப்படலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். “தானியங்கி வாகனங்கள் நகர்ப்புற நகர்வுகளை மறுவடிவமைத்தல்” என்ற கண்காட்சி, இப்போது நடைபெற்று வருகின்றது. மார்ச் 29 வரை URA சென்டர் ஏட்ரியத்தில் பொதுமக்களுக்கு இந்த கண்காட்சி திறந்திருக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts