சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் சில பயனர்கள் Raid-Hailing மற்றும் உணவு விநியோக சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவருவதாக இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 16) காலை Grab நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்கள் குழுக்கள் இந்த சிக்கலை சரிசெய்ய கடினமாக உழைத்து வருகின்றன. வடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், என்று சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Grab நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயனர்கள் சுமார் காலை 8 மணி முதல் Grabன் Facebook பக்கத்தில் கருத்துத் தெரிவிப்பதைக் காண முடிந்தது, அவர்கள் பயன்பாட்டில் இருப்பிடங்கள் மற்றும் சவாரிகளை பதிவு செய்ய முடியவில்லை என்று கூறினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் பாங்காக்கை தளமாகக் கொண்ட ஒரு பயனரும் இருந்தார், அவர் சவாரி செய்யும் இடங்கள் கடந்த சில மணிநேரங்களாக பயன்பாட்டில் கிடைக்கவில்லை என்று கூறினார் என்று CNA நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் ஜூரோங் பகுதியில் தீ விபத்து
அதே போல இந்த செயலி கோளாறானது பயணிகளுக்கு மட்டுமின்றி, வேலைகளைப் பெற முடியாத ஓட்டுநர்களுக்கும் செயலிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. “எங்கள் பொறியாளர்கள் பயன்பாட்டை மீட்டெடுக்க முழு வேகத்தில் வேலை செய்கிறார்கள். தயவுசெய்து எங்களுடன் பொறுமையாக காத்திருங்க இருங்கள்” என்று Grab மேலும் கூறியது.
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/saagatamil
சுமார் ஒரு மணி நேரம் கழித்து காலை 9 மணிக்கு, நிறுவனம் பேஸ்புக் பதிவில், “எங்கள் சில சேவைகளை தற்போது அணுக முடியாது” என்றும், இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே அறிக்கை GrabFood-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டது.