SINGAPORE: ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினத்தை நினைவுகூரும் வகையில், இம்முறை சிங்கப்பூரில் உள்ள 56 கட்டிடங்கள் மற்றும் முக்கிய அடையாளங்கள் நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2014 இல் தொடங்கப்பட்ட தேசிய நீர் நிறுவனமான PUB இன் சிட்டி டர்ன்ஸ் ப்ளூ முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தக் கட்டிடங்கள் மற்றும் அடையாளங்களின் முகப்பு மார்ச் 19 முதல் 22 வரை ஒளிரும்.
கேபிடோல் சிங்கப்பூர் (Capitol Singapore), தி ஃபுல்லர்டன் ஹோட்டல் மற்றும் சென்டோசாவில் உள்ள ஸ்கைஹெலிக்ஸ் open-air ride உட்பட 16 முக்கிய இடங்களில் முதல் முறையாக நீல நிறத்தில் ஒளிர வைக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு, சிங்கப்பூரில் 44 உள்ளூர் அடையாளங்கள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. அயன் ஆர்ச்சர்ட் (Ion Orchard ) மற்றும் ஆர்ட் சயின்ஸ் மியூசியம் (ArtScience Museum) ஆகிய இடங்களும் இதில் அடக்கம்.
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் உலக நீர் தினம் உருவாக்கப்பட்டது. நீரின் முக்கியத்துவம் போற்றப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நாள் அமைக்கப்பட்டது.
GoBlue4SG மற்றும் #MakeEveryDropCount என்ற ஹேஷ்டேக்குகள் மூலம், சமூக ஊடகங்களில் மக்கள் இந்த நீர் சேமிப்பு பிரச்சாரத்தில் இணையலாம். அதாவது, நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இந்த ஹேஷ்டேக்ஸ் பயன்படுத்தி பதிவிடலாம்.
உலகின் நன்னீரில் 30 சதவீதம் நிலத்தடி நீரிலிருந்து வருகிறது, ஆனால் தண்ணீர் பற்றாக்குறை உலகளவில் வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.