சிங்கப்பூர் போன்ற Hi-Tech நாடுகளில் வாழ யாருக்கு தான் ஆசை இல்லை, இன்றளவும் இந்தியர்கள் உலகின் பல நாடுகளில் குடியேறி வருகின்றனர். கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகள் அந்த பட்டியலில் முதன்மையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் காண உள்ள இந்த பதிவிலும், சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள், இங்கு நிரந்தர வாசிகளாக மாற முடியுமா? என்பதை குறித்த ஒரு முழுமையாக பதிவை தற்போது காணலாம்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் வரும் தமிழக பயணிகளுக்கு சலுகை அறிவித்த Scoot
உலக அளவில் பல நாடுகளில் Dual Citizenship என்ற ஒரு முறை அமலில் உள்ளது. யாதும் ஊரே.. யாவரும் கேளிர் என்ற பெண்மொழிகளுக்கு ஒப்பாக மக்கள் தேசங்கள் கடந்து தங்கள் வாழ்க்கை முறையை சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்த டிஜிட்டல் உலகில் ஒரு நாட்டை சேர்ந்த குடிமகன் வேறொரு நாட்டின் குடிமகனாகவும் வாழமுடியும். தனது தாயகமாக சில நாடுகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக உரிய ஆவணங்களுடன் ஒரு இந்தியர் லண்டன் சென்றால் 5 ஆண்டுகளில் (சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு) அவரால் லண்டன் வாசியாக மாறமுடியும்.
அதே போல சிங்கப்பூர் நாட்டிற்கு வேலை நிமித்தமாக வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு நிரந்தரவாசிகளாக மாற முடியுமா? என்பதை குறித்தும். அதற்கு என்ன வழிமுறைகள் என்பதையும் இந்த பதிவில் நாம் காணலாம்.
“S பாஸ்”, பல வெளிநாட்டு ஊழியர்களின் கனவு இதுவென்பது யாராலும் மறக்கமுடியாத உண்மை. ஒரு வெளிநாட்டு தொழிலாளர் இங்கு நிரந்தரவாசியாக மாற இது ஒன்றே வழி. Work Permit வைத்துக்கொண்டு சிங்கப்பூர் வருபவர்களால் இங்கு நிரந்தர வாசிகளாக மாற முடியாது. எடுத்துக்காட்டாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் ஒருவர் கண்டிப்பாக S பாஸ் முறையில் வந்தால் மட்டுமே அவரால் நிரந்தரவாசிக்காக பதிவு செய்யமுடியும்.
சரி S பாஸ் வைத்திருந்தால் மட்டும் போதுமா? கண்டிப்பாக சிங்கப்பூர் நிரந்தரவாசியாக மாறிவிடலாமா? என்றால், அதுவும் சற்று கடினமே. ஆனால் S பாஸ் இருந்தால் நீங்கள் நிச்சயம் நிரந்தரவாசிக்காக பதிவு செய்யலாம். ஆனால் இதற்கான முறையை சிங்கப்பூர் அரசு எப்படி கையாள்கிறது என்பது கொஞ்சம் ரகசியமாகவே உள்ளது. 10, 15 ஆண்டுகளாக S பாஸ் வைத்திருக்கும் பலருக்கு நிரந்தரவாசிக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதே போல வெகு சில ஆண்டுகள் S பாஸ் வைத்து இங்கு வேலை செய்தவர்களுக்கு நிரந்தரவாசிக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008ம் ஆண்டில் மட்டும் தான் அதிக அளவில் தமிழர்கள் இங்கு நிரந்தரவாசிகளாக மாறினார். ஆனால் அதற்கு பிறகு பெரிய அளவில் யாரும் மாறவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
நிரந்தரவாசியாக என்ன தகுதி வேண்டும்?
S பாஸ் வைத்திருக்கும் பட்சத்தில் நமது சம்பளம் குறைந்தபட்சம் 1800 வெள்ளியாக இருக்க வேண்டும். அடுத்தபடியாக இணையத்தில் S பாஸ் அப்ளிகேஷன்களை பூர்த்தி செய்து நியமனம் பெறவேண்டும். மேலும் இணைய பதிவின்போது கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் அவர்கள் கட்டாயம் புரிதிசெய்யவேண்டும். அதே சமயம் பதிவின்போது கேட்கப்படும் அனைத்து ஆவணங்களும் நகல் இல்லமல் அசல் சான்றிதழும் கையில் இருத்தல் வேண்டும்.
அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அதற்கான அதிகாரியை நேரில் சந்திக்கும்பட்சத்தில் நீங்கள் அப்ளை செய்ததற்கான சான்றிதழை அந்த அதிகாரி உங்களிடம் அளிப்பார். கண்டிப்பாக நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்துவரும் நிறுவனத்திடம் இருந்தும் கட்டாயம் கடிதத்தை பெறவேண்டும். இந்த ஆவணங்கள் எல்லாம் பதிவு செய்த 60 முதல் 90 நாட்களில் உங்களுக்கு சிங்கப்பூர் நிரந்தவாசிகள் அலுவலகத்தில் இருந்து கடிதம் வரும். அந்த கடிதத்தில் தான் நீங்கள் நிரந்தவாசியாக மாறிவிடீர்களா? அல்லது இல்லையா? என்பது தெரியும்.
மேலும் முன்பெல்லாம் இந்த S பாஸ் அப்ளை செய்வதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு அப்ளை செய்வதற்கும் சரியாக 130 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் பணத்தை செலுத்தி நீங்கள் அப்ளை செய்யவேண்டும். இதுதான் நீங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு நிரந்தரவாசியாக மாற தற்போது அமலில் இருக்கும் வழிகளாக பார்க்கப்படுகிறது.
Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி