TamilSaaga

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் கமலா ஹாரிஸ் – ஹாரிஸின் பெயரிடப்பட்ட ஆர்க்கிட் மலர்கள் பரிசளிப்பு

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலை பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிஸ் அவர்களின் இந்த உத்தியோகபூர்வ மூன்று நாள் பயணத்தின்போது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் காலநிலை மாற்றம் மற்றும் பெருந்தொற்றுநோயைக் கையாளுதல் ஆகியவை அடங்கும்.

திருமதி ஹாரிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் வந்தடைந்தார். வியட்நாமுக்கான பயணத்தையும் உள்ளடக்கிய ஆசியாவிற்கான அவரது முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு CNA செய்தி வருவதால் நேரலை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்கப்பூர் வந்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் வருகையின் போது அவரது பெயரிடப்பட்ட ஆர்க்கிட் அவருக்கு வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் (MFA) கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலர்களை பரிசளித்தார் பிரதமர் லீ. மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் அடுத்தபடியாக வியட்நாம் நாட்டிற்கு செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts