TamilSaaga

“எவ்வளவு திமிர்”! சிங்கப்பூரில் டிராஃபிக் போலீஸை… அப்படியே இழுத்துப் பிடித்து தரதரவென காரில் இழுத்துச் சென்ற நபர்.. வெளியான வீடியோ

சிங்கப்பூரில் கடந்த அக்.9ம் தேதி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை பாதுகாக்கும் போலீசாரையே ஒரு நபர் டார்ச்சர் செய்துவிட்டார். அதற்கான பிரதிபலனையும் இப்போது அனுபவிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

சிங்கப்பூரின் Holland Road-ல் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, மாலை 5.15 மணியளவில் அந்த பக்கமாக வந்த டாக்சியை ஓட்டி வந்த டிரைவர் மொபைலை நோண்டியபடியே காரை இயக்கினார்.

இதனைக் கண்ட அந்த காவலர் உடனடியாக காரை வழிமறித்து, அந்த டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். 69 வயதான அந்த டிரைவர் கீழே இறங்க முடியாது என்று வாக்குவாதம் செய்ய, சரி… காரின் ஆவணங்களை எடுத்துக் காண்பிக்க காவலர் அறிவுறுத்தினார்.

அதற்கும் முடியாது என்று அந்த டிரைவர் மறுக்க, உடனடியாக அந்த காவலர் தனது கையை உள்ளே விட்டு, சாவியை கொண்டு காரை ஆஃப் செய்ய முயன்றார். ஆனால், அந்த டிரைவரோ உடனடியாக காரின் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, வண்டியையும் ஸ்டார்ட் செய்து ஓட்டத் தொடங்கிவிட்டார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் கையும் களவுமாக சிக்கிய வெளிநாட்டு ஊழியர்.. சம்பளத்தில் முக்கால்வாசி அபராதம் – ‘தெரியாம செஞ்சிட்டேன்’ என்று வேதனை!

இதனால், கை சிக்கிக் கொள்ள, சில மீட்டர் தூரம் தரதரவென அந்த காவலர் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. இந்த வீடியோ இந்த இணையதளங்களில் அதிகம் பரவ, அந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

34 வயதான அந்த காவலரை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது சுயநினைவுடன் இருக்கிறார்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த டிரைவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

அதுமட்டுமின்றி, சாலையில் வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தியதற்காக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts