TamilSaaga

“வீடுகளில் வெப்பத்தை குறைக்க புதிய வழி” – சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழகம் அறிவிப்பு

சிங்கப்பூரின் தெம்பைன்ஸ் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டிடங்களுக்கு வெப்பத்தை தணிக்கும் சாயங்கள் பூசப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாயங்களை வீடுகளுக்கு பூசுவதனால் ஒன்றிலிருந்து இரண்டு டிகிரி வரை வெப்பங்கள் குறைவு பெரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பூசப்படும் இந்த வெப்பநிலை குறைக்கும் சாயங்களின் தரவுகளை பொறுத்து சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள விவேக கட்டிடங்களில் இந்த சாயத்தை பூச முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் இந்த சாயங்களால் தீசம்பவங்களும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் தீ சம்பவங்கள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நேற்றும் தெம்பைன்ஸ் பகுதியில் ஒரு தீ சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) தெம்பைன்ஸ் ஸ்ட்ரீட் 81ல் உள்ள ஒரு காபி ஷாப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. Tampines coffee shop தீவிபத்தால் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என SCDF தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்குள் நான்கு தண்ணீர் ஜெட் மூலம் தீ அணைக்கப்பட்டது, மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தனது முகநூல் பக்கத்தில் மாலை 5:30 மணியளவில் அறிவித்தது.

Related posts