TamilSaaga

“இந்தியாவிற்கு உதவிய சிங்கப்பூரின் SICCI” : விளக்கமளித்த சிங்கப்பூர் எம்.பி விக்ரம் நாயர்

சிங்கப்பூரில் ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய உலக சமுதாயத்தை கட்டமைப்பதில், குறிப்பிடத்தக்க பங்கு வகிக்குமாறு சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் இங்குள்ள இந்திய வணிக சமூகத்தை வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய பன்னாட்டு சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகம் அதிகம் செயல்பட வேண்டும் என்றும் விக்ரம் நாயர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் செயல்படும் சிங்கப்பூர் இந்திய வணிகர் சங்கத்தின் (SICCI) தலைமையில் கடந்த வெள்ளியன்று இணையவழியில் நடைபெற்ற 56 வது தேசிய தினக் கொண்டாட்ட விழாவில் இந்திய வணிக சமூகத்தின் உறுதிப்பாட்டை பற்றி அவர் எடுத்துரைத்தார். நாட்டின் 56 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இன்று பல்வேறு இந்திய அமைப்புகள் மற்றும் சேம்பர் உறுப்பினர்கள் இங்கு குடியிருப்பது நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது என்றார்.

மேலும் SICCI சிங்கப்பூரில் உள்ள மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து 1 மில்லியன் வெள்ளியை இந்திய பெருந்தொற்று நிவாரண நிதிக்காக சேகரித்து. மேலும் இந்த நிதியை சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம், இந்தியாவில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக வழங்கியது என்று கூறினார் நாயர்.

SICCI தலைவர் டாக்டர் டி. சந்திரூ, “சிங்கப்பூரில் வணிகங்கள் அதிக உயரத்திற்கு உயரவும், சர்வதேசமயமாக்கவும் SICCI உறுதிபூண்டுள்ளது என்றார். எங்கள் 56 வது தேசிய தினத்தை கொண்டாடும் போது, ​​வணிகர் சமுதாயத்திற்கு விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்வதற்கான முயற்சிகளை சேம்பர் தொடர்ந்து மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts