TamilSaaga

பாலியல் குற்றம் செய்யும் எண்ணமே இனி வரக்கூடாது.. பாதிக்கப்படும் அனைவரையும் பாதுகாக்க “புதிய நடவடிக்கை” – அமைச்சர் சண்முகம் அதிரடி!

சிங்கப்பூரில் பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அத்தகைய வழக்குகளைக் கண்காணிக்கும் புதிய போலீஸ் துறை ஒன்று உருவாக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக் கொண்ட இந்த சிறப்பு காவல் துறை அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்று சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை (ஏப். 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த துறையில் நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு Victim Management குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்று திரு சண்முகம் தெரிவித்தார். இன்று சிங்கப்பூரில் நடந்த காவல்துறையின் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்புரையாற்றி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

3 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக.. சிங்கப்பூரில் 500 பேர் வரை ஒன்றுகூடி தொழுகை நடத்த MOM ஏற்பாடு – சக ஊழியர்களோடு அல்லாஹ்வை வணங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

சிங்கப்பூர் காவல் படையும் (SPF) இந்த திட்டத்தில் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வலுப்படுத்த தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கவுள்ளது. உதாரணமாக, SPFயின் குடும்ப வன்முறை நிபுணர் மையத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் தன்னார்வலர்களை செயல்படுத்தும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியாக உதவிகளை வழங்குவது தொடங்கி சட்ட ரீதியாக அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை எல்லாவற்றிலும் பல மேம்பட்ட செயல்களில் இந்த புதிய போலீஸ் போலீஸ் துறை செயலாற்றும்.

இத்தனை கெடுபிடி சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூரில்… இப்படியும் ஒரு “பணவெறி” பிடித்த டாக்டர் – வீடே 2 மில்லியன் டாலருக்கு அடமானம்!

மேலும் அமைச்சர் திரு. சண்முகம் பேசுகையில், SG Her Empowerment Limited (SHE) என்ற புதிய தொண்டு நிறுவனம் இந்த மாதம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆன்லைன் மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு மையத்தை அமைப்பது உட்பட பெண்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளை SHE கையாளும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த ஆதரவு மையமானது, பெண்களின் உரிமைகளைப் பற்றித் தெரிவிக்கும் இணையதளத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் அழைக்க ஒரு ஹெல்ப்லைனையும் கொண்டிருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts