லாட்டரி குலுக்கல் என்பது சிங்கப்பூரில் சட்டரீதியாக நடத்தப்பட்டு வருகிறது. TOTO, Singapore Sweep, 4D என மூன்று வகையான லாட்டரிகள் உள்ளன. சிங்கப்பூரின் பிரபல TOTO லாட்டரியின் இந்த வார முதல் குலுக்கலில் முதல் பரிசை யாரும் பெறவில்லை. இரண்டாவது பரிசான $82,168 டாலரை தலா 3 பேர் பெற்றுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சமாக கணக்கிடப்படுகிறது.
இந்த நேரத்தில் ஒரு சுவாரஸ்யமாக சம்பவத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். TOTO வை போல சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கும் இன்னொரு லாட்டரி என்றால் அது Singapore Sweep. இதில் மாதம் முதல் புதன்கிழமை குலுக்கல் நடைபெறும். அந்த லாட்டரியின் விலை 3 டாலர். அதில் வெல்பவர்களுக்கு $23 லட்சம் கொடுக்கப்படும். இது இந்திய மதிப்பில் கணக்கிடும் போது 13 கோடி ரூபாயாக கணக்கிடப்படுகிறது.
பிலிம்பைன்ஸில் இருந்து வந்த வீட்டு வேலைக்கார பெண் இதில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். 2015ல், ஆண்டு ஜூன் மாதம் Singapore Sweep புதன்கிழமை நடக்கிறது. இந்த வேலைக்கார பெண்ணுக்கு தான் அன்றைய லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
இதில் ரொம்ப சந்தோஷமான அந்த பெண் தன் முதலாளியிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் முதலாளி வாழ்த்து சொல்லிவிட்டு பிறகென்ன இனி நீ வீட்டு வேலை செய்ய மாட்டியே என கவலையுடன் கேட்டாராம். ஆனால் அந்த பெண்ணோ உங்களுடன் தான் இருப்பேன். உங்களிடம் இருப்பதை நான் சேவையாக தான் செய்கிறேன் எனக் கூறி சென்றாராம்.
அடுத்த நாளே லாட்டரி தலைமை அலுவலகத்திற்கு சென்று தனது பரிசுத்தொகைக்கான காசோலையை பெற்று கொள்கிறார். அதை வங்கியில் செலுத்தி பணமும் வந்துவிட்டது. பிலிம்பைன்ஸில் இருக்கும் தனது மகளுக்கும், மகனுக்கு ஒரு தொகையை அனுப்பி இருக்கிறார்.
வீடு கட்டுவதற்காக மிச்ச தொகையை வங்கியிலேயே வைத்து இருக்கிறார். ஒரு மாதம் கழித்து இவரை தேடி போலீஸ் விசாரணைக்காக வருகிறது. என்ன சார் எதுக்காக வந்து இருக்கிறீர்கள் என இந்த பெண் கேட்டு இருக்கிறார். நீங்க லாட்டரியை திருடிவிட்டீர்கள் என ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக கூறுகிறார்.
உடனே அதிர்ந்தவர் இல்லையே இது நான் வாங்கியது தான் என வாதிட்டு இருக்கிறார். இருந்தும் போலீஸ் அவரின் வங்கி கணக்கை லாக் செய்து விடுகின்றனர். அதை தொடர்ந்தே அவரிடம் விசாரணை செய்ய, தான் டாம்பனீஷில் தான் இந்த டிக்கெட்டை வாங்கினேன் என அவர் கூறுகிறார்.
லாட்டரி வாங்கப்பட்ட கடைக்கு இவரை அழைத்து செல்கின்றனர். அந்த கடையின் உரிமையாளரிடம் சிசிடிவி ரிக்கார்ட்டை கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதம் ஆகிவிட்டதால் அந்த வீடியோக்கள் டெலிட் ஆகிவிடுமே எனக் கூறிவிட்டனராம்.
இதற்கிடையில் அந்த பெண் வேலை செய்யும் வீட்டு உரிமையாளர், எனக்கு இவரை 14 வருடமாக தெரியும். ரொம்ப நாணயமா இருப்பாங்க. இவங்க திருடுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என நல்லதாகவே கூறினாராம்.
போலீஸும் தொடர்ந்து தனது விசாரணையை முடக்கி விட்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் தான் இந்த பெண் திருடவில்லை என்பதை காவல்துறை கண்டுப்பிடித்து இருக்கின்றனர். பின்னர், அந்த பெண்ணிடம் உங்கள் பணத்தினை விடுவித்து விட்டோம் என ஒரே மாதத்தில் விசாரணையை முடித்து அவரை விடுவித்து இருக்கிறார்கள்.
ஆனால் அவர் மீது யார் புகார் கொடுத்தார். தவறான புகாருக்காக அவர்கள் மீது எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.