TamilSaaga

“ஜோகூர் மாநிலத்திற்கு 1,00,000 டோஸ் Pfizer தடுப்பூசிகள் வழங்கும் சிங்கப்பூர்” – ஜோகூர் முதல்வர் அறிவிப்பு

நமது சிங்கப்பூர் அரசு ஜோகூர் மாநிலத்திற்கு 1,00,000 டோஸ் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்கும் என்று முதல்வர் ஹஸ்னி முகமது இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 6) அன்று தெரிவித்தார். மாநில சட்டசபையில் தடுப்பூசி வழங்குவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர், “ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் மாநிலங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவின் அடையாளமாக, சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஜூலை 29ம் தேதி 2021 அன்று 20,000 சினோவாக் தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது” என்றார்.

மேலும் குறுகிய காலத்தில், சிங்கப்பூர் அரசு 1,00,640 டோஸ் ஃபைசர் தடுப்பூசியை ஜோகூர் மாநில அரசுக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்பட்ட 3,00,000 டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசியை மாநில அரசு ஏற்றுக்கொண்டதாகவும் முதல்வர் கூறினார். முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் திரு. ஹிஷாமுதீன் ஹுசைன், தடுப்பூசிகளைப் பெறுவதற்கான செயல்முறையைப் பெறுவதற்கும் எளிதாக்கும் முயற்சிகளுக்கும் திரு. ஹஸ்னி நன்றி தெரிவித்தார்.

திரு ஹிஷாமுதீன் இப்போது இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகூர் மாநில அரசு தனது மாநிலத்தில் உள்ள முதியவர்களின் 100 சதவிகிதம் பேருக்கு செப் 16ம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியையும், அக்டோபர் மூன்றாவது வாரத்திற்குள் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெறுவதை உறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

திரு ஹஸ்னி மேலும் கூறுகையில், மார்ச் 1 முதல் செப்டம்பர் 5 வரை, ஜோகூர் 4.7 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திலிருந்து பெற்றுள்ளது என்றார்.

Related posts