சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) பிறந்த பிறகு உயிர் பிழைத்த மிகச்சிறிய குழந்தை தற்போது 13 மாதங்கள் கழித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நல்லபடியாக வெளியேறியுள்ளது என்ற மகிழ்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
பிறக்கும் போது, அந்த பெண் குழந்தை வெறும் 24 செ.மீ நீளம் மட்டுமே இருந்தால். ஒரு மினரல் வாட்டர் பாட்டிலின் உயரம் கொண்ட குழந்தையாக அவள் இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி அன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, யூ சூவானின் எடை 6.3 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
“அயோவா” பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் மிகச்சிறிய குழந்தைகள் பதிவேட்டின் அடிப்படையில், உலகின் மிக இலகுவான குழந்தை இவர் என்று NUH கூறினார். உலகில் இதுபோன்ற குறைவான உடல் எடையோடு பிறந்து தப்பிப்பிழைத்த குழந்தை இதற்குமுன் அமெரிக்காவில் 245g எடையில் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பணிபுரியும் சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர்களான யூ சுவானின் பெற்றோர், ஆரம்பத்தில் மலேசியாவில் யூ சுவானை பிரசவித்து, அங்கு வசிக்கும் தங்கள் முதல் குழந்தையான நான்கு வயது சிறுவனுடன் மீண்டும் இணைய விரும்பினர்.
ஆனால் அவரது தாயார் preeclampsiaவால் பாதிக்கப்பட்டார் மற்றும் 24 வாரங்கள் மற்றும் 6 நாட்கள் கர்ப்ப காலத்தில் அவசர அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். preeclampsia என்பது கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் இருக்கும் ஒரு நிலை என்பது குறிப்பிடத்தக்கது.