TamilSaaga

பொய் மூட்டை.. சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கே “அல்வா” கொடுத்த முன்னாள் எம்.பி. ரயீசா – கூட்டு சேர்ந்ததால் எதிர்க்கட்சித் தலைவருக்கும் “செக்”

சிங்கப்பூரில் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதற்காக தொழிலாளர் கட்சியின் (WP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு S$35,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று சிறப்புரிமைக் குழு (COP – The Committee of Privileges) தற்போது பரிந்துரைத்துள்ளது. மேலும் WP பொதுச்செயலாளர் ப்ரீதம் சிங் மற்றும் துணைத் தலைவர் பைசல் மனாப் என்ற அல்ஜூனிட் GRC எம்.பி.க்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் குழு முன்மொழிந்தது.

Big Breaking : “சிங்கப்பூர் உள்பட அனைத்து வெளிநாட்டு பயணிகள்” : கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்தியா – எப்போது அமலாகிறது?, முழு விவரம்

COP, நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 10) வெளியிட்ட தனது இறுதி அறிக்கையில், ஆகஸ்ட் 3 அன்று சபையில் ஒரு பொய்யைச் சொன்னதற்காகவும், பின்னர் அக்டோபர் 4ம் தேதி அதைத் திரும்பத் திரும்பச் சொன்னதற்காகவும் எம்.எஸ். கான் சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்ததாகக் கண்டறிந்ததாகக் குழு கூறியது. சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணுடன் காவல்நிலையத்திற்கு சென்றதாகவும், அந்த வழக்கை போலீசார் தவறாக கையாண்டதாகவும் பொய்யுரைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் எம்.பி. பதவியையும் WP-யில் இருந்தும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களாக கமிட்டியின் விசாரணைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “பாராளுமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்ததில், சபையின் கண்ணியம் மற்றும் நல்லொழுக்கத்தை பொருட்படுத்தாமல் கான் செயல்பட்டதாக கமிட்டி கருதியது. இருப்பினும், ஆகஸ்ட் 8 முதல், கான் மூன்று மூத்த WP தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருவதாகவும், அக்டோபர் 3 அன்று அவர் தொடர்ந்து பொய் சொல்ல திரு சிங்-கால் வழிகாட்டப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள S$35,000 அபராதம் என்பது இரண்டு அபராதங்களின் கலவையாகும் – ஆகஸ்ட் 3 அன்று பொய் உரைத்ததற்காக S$25,000, “அதற்கு முழு பொறுப்பையும்” அவர் ஏற்க வேண்டும், மேலும் அக்டோபர் 4 அன்று பொய்யை மீண்டும் சொன்னதற்காக S$10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. COPன் கண்டுபிடிப்புகள் மூன்று WP தலைவர்களின் நடத்தை பற்றிய கேள்விகளை எழுப்பியதால், மேலும் விசாரணைகளுக்காக திரு சிங் அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.

கமிட்டியின் தொடர்புடைய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததற்காக திரு. பைசல் விசாரிக்கப்படுவார் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா? என்பதும் பரிசீலிக்கப்படும். கானின் நடத்தையை பரிசீலிப்பதற்காக WP ஆல் கூட்டப்பட்ட ஒழுங்குமுறைக் குழு தனது பணியை “Self Service” முறையில் மேற்கொண்டதாகவும் குழு முடிவு செய்தது. சபாநாயகர் டான் சுவான்-ஜின் தலைமையில் நடைபெற்ற COPயில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர் – கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர்கள் அமைச்சர் எட்வின் டோங், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, பாதுகாப்பு மற்றும் மனிதவளத் துறைக்கான மூத்த அமைச்சர் ஜாக்கி முகமது, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தகவல் தொடர்பு மற்றும் தகவல் மற்றும் சுகாதாரத்திற்கான நாடாளுமன்றச் செயலர் ரஹாயு மஹ்ஜாம், எம்.பி. டான் வீ (PAB-சுவா சூ காங்) மற்றும் எம்பி டெனிஸ் டான் (WP-ஹூகாங்).

“சிங்கப்பூர் புகைப்பட கலைஞர்களின் கை வண்ணம்” : கொஞ்சி குலாவிய அறிய வகை ஆந்தைகள் – காதலர் தின கொண்டாட்டங்கள் துவக்கம்

COP மொத்தம் 35 மணி நேரம் 15 கூட்டங்களை நடத்தியுள்ளது, கூடுதலாக 31 மணிநேர விசாரணைகள் நடந்துள்ளன, அங்கு ஒன்பது சாட்சிகளிடமிருந்து வாய்வழி ஆதாரங்களைக் கேட்டது என்று பாராளுமன்ற எழுத்தர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது ஆறு சிறப்பு அறிக்கைகள் மற்றும் 1,180 பக்கங்களுக்கு மேல் ஒரு இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் அளித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts