TamilSaaga

புரிஞ்சவன் பிஸ்தா!

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் உள்ள கிராமம் இது. அங்கே மளிகைக் கடை வைத்திருப்பவர் மாணிக்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த ஊரில் இருக்கும் ஒரே மளிகைக் கடை இவருடையது தான். சுயமாக சம்பாதித்து, அந்த ஊரே பார்த்து வியக்கும் அளவுக்கு சொந்த வீடே கட்டிவிட்டார்.

இந்நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு மாணிக்கத்துக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவரோ ஆள் பார்க்க சுமாராக இருப்பவர். ஆனால், அந்த பெண்ணோ மற்றவர்களை பார்க்கத் தூண்டும் கலையான முகம்.

இதனால், திருமணம் நடைபெற்ற நாள் அன்றே மண்டபத்திலும் சரி… பந்தியிலும் சரி… ஊர் முழுவதும் சரி.. இவனுக்கு பார், இப்படி ஒரு பொண்ணு அமைஞ்சிருக்கு என்று சலசலக்க, அது மாணிக்கம் காதிலும் வந்து விழுந்தது. ஆனால், அவர் அதை துளியும் கண்டுகொள்ளவில்லை.

முழுதாக ஐந்து மாதங்கள் கழிய, திடீரென ஒருநாள் குடும்பத்தினரிடம் ஒரு வெடிகுண்டை தூக்கிப்போட்டார் மாணிக்கம். அவர்களிடம், “எனக்கு இந்த பெண்ணுடன் வாழ விருப்பமில்ல. அதனால எங்களை வெட்டி விட்டு விடுங்க” என்று சொல்ல உறவினர்கள் வெலவெலத்துப் போனார்கள். யார் எவ்வளவு கேட்டும், மாணிக்கம் பிரிவுக்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை. அந்த பெண்ணோ, வாயில் புடவையின் முந்தானையை அடைத்துக் கொண்டு, அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

எவ்வளவோ சமாதானம் பேசியும், வழிக்குவராத வராத மாணிக்கம், ‘அந்த பெண்ணுடன் வாழ எனக்குத் தகுதியில்லை’ என்று கறாராக கூற, ‘சரி.. கண்டிப்பா வெட்டி விட்டுடுறோம். ஆனா.. நீ காரணத்தை கண்டிப்பா சொல்லியே ஆகணும்’ என்று பெரியவர்கள் கூற, பிறகு தான் விஷயம் தெரிந்தது.

கல்யாணம் ஆன புதிதில், அந்த பெண் ஆயிரம் கனவுகளுடனும், ஆசைகளுடனும் இல்லறத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதே மனநிலையில், மனதில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க முதலிரவன்று நுழைந்த அந்த பெண்ணிடம், ‘உன்னை பார்க்க என் அம்மா மாதிரியே இருக்கு.. சின்ன வயசுலயே என் அம்மா இறந்துட்டாங்க’ என்று கூறி கண் கலக்கியிருக்கிறார்.

கணவரின் சிறு வயது துக்கம் அறிந்து அவளும், ‘இனி உங்களுக்கு நான் இருக்கேன்.. அம்மாவுக்கு அம்மாவாக.. மனைவிக்கு மனைவியாக’ என்று சொல்லி தேற்ற, மேற்கொண்டு எந்த சமாச்சாரமும் நடைபெறாமல் முதலிரவு முடிந்துவிட்டது. ‘சரி.. கணவர் ஏதோ எமோஷனல் ஆயிட்டார்.. நாளைக்கு பார்த்துக்கலாம்’ என்று அந்த பெண்ணும் தன்னை சமாதானம் செய்துகொண்டார்.

ஆனால், தினம் தினம் ஒவ்வொரு இரவும் கழிந்ததே தவிர, அவருடைய கை விரல் கூட மனைவி மீது படவில்லை. மாதம் ஒன்றானது.. இரண்டானது.. மூன்றானது.. ஒரு துரும்பு கூட அசையவில்லை. இதனால் வெறுத்துப் போன அந்த பெண், கணவரிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட, ‘உன்னை பார்த்தாலே எனக்கு அம்மா நியாபகம் வந்துடுது. பிறகு நான் எப்படி உன்னை தொடுவேன்?” என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.

சரி.. என்னை பெண் பார்க்க வரும் போதே இதை சொல்லி இருக்கலாமே.. அல்லது என்னிடம் மொபைலில் பேசிய போதாவது சொல்லி இருக்கலாமே.. என் வாழ்க்கையை இப்படி வீணடிச்சுட்டீங்களே!! நான் இனி என்ன செய்வேன் அவர் கதறி அழுத்த பிறகு அவர் மற்றொரு வெடிகுண்டை வீசியிருக்கிறார். இம்முறை ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு நிகரானது.

“எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லை. ஆனால், பெரியவங்க வறுபுறுத்தியதால் உன்னை கல்யாணம் செய்து கொண்டேன்” என்று இறுதியாக மாணிக்கம் உண்மையை சொல்ல, இன்று க்ளைமாக்ஸ் அரங்கேறிவிட்டது.

Related posts