TamilSaaga

சிங்கப்பூர் Marina Boulevard சாலை.. நடுரோட்டில் தனியே சென்ற சிறுமி – நொடிப்பொழுதில் “ரியல் லைப் ஹீரோவாக” மாறிய SBS ஓட்டுநர்

சிங்கப்பூரின் பரபரப்பான சாலையின் நடுவே ஒரு சிறுமி தன்னந்தனியாக நடந்து செல்வதை பார்த்த ஒரு SBS ஓட்டுநர் சற்றும் தாமதிக்காமல் பேருந்திலிருந்து குதித்தோடி அந்த சிறுமியை காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ong Shi Chuin என்று அந்த ஓட்டுநர் கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று மெரினா பவுல்வார்டு வழியாக சர்வீஸ் 400ஐ ஓட்டிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பஸ் ஒரு பாதசாரி கிராஸ்ஸிங் பகுதியில் நின்றது. அப்போது தான் ஓட்டுநர் Ong ஒரு சிறுமியை ஐந்து Lane கொண்ட அந்த பரபரப்பான சாலையில் காண்கிறார்.

தனுஷின் VIP பட பைக்கிற்கே Tough கொடுத்த சிங்கப்பூரர்.. ஒரே மாதத்தில் 2000 கிலோமீட்டர் பயணம் – தாய்லாந்தை சுற்றி வலம்வரும் ஒரு Free Bird

உடனே பேருந்தில் இருந்து வெளியே சென்ற அவர், சிறுமியை பத்திரமாக மீட்டு, அவளை அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிக் கொண்டார். பின்னர் அந்த இடத்திற்கு அருகில் அவளை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோரிடமும் ஒப்படைத்தார்.

சிறுமி அந்த பகுதிக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திலிருந்து பாதை மாறி, பரபரப்பான சாலைகளை நோக்கிச் சென்றுள்ளார் என்பது பிறகு தெரியவந்தது. சாலையில் தனியே நடந்து செல்லும் ஒரு சிறுமியை பார்த்ததும் அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்பதை நான் உணர்தேன். ஆகவே சற்றும் தாமதிக்காமல் கீழே இறங்கி அவளை மீட்டேன் என்று கூறியுள்ளார் அந்த ஓட்டுநர்.

சிங்கப்பூர் வீட்டை விற்று மகளுடன் வாழ ஆசையாய் வெளிநாடு சென்ற தாய்.. தேவை முடிந்ததும் விரட்டிய பிள்ளை – சிங்கையில் வாழ வழிதெரியாமல் தவிக்கும் மூதாட்டி

ஓட்டுநர் ஓங்கின் விரைவான சிந்தனைக்காக

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts