TamilSaaga

சிங்கப்பூரில் S Pass, Work Permitல் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம் – சிங்கை அரசு கொடுத்த “புதிய Update”

சிங்கப்பூரில் Work Permit வைத்திருப்பவர்கள் மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்ச மருத்துவக் காப்பீடு (higher medical insurance coverage)கட்டாயமாக்கப்படுகிறது. இதனை ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் கட்டாயம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மனிதவளத்துறைக்கான மூத்த அமைச்சர் கோ போ கூன் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த காப்பீடு பெரிய முதலாளிகளைப் பாதுகாக்கும் வகையில் உயர்த்தப்படும் என்றும் இந்த புதிய திட்டம் வீட்டு உதவியாளர்களுக்கும் ((Domestic Helpers or maids) பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும் என்றும் அனைத்து புதிய work permit மற்றும் S Pass விண்ணப்பங்கள் மற்றும் Renewal-களுக்கும் இது பொருந்தும்.

S-passக்கு பதிலாக Work Permit-ல் இந்தியர்களை வேலைக்கு அழைக்கலாம் – ஆள் பற்றாக்குறையை போக்க MOM Emergency உத்தரவு

இந்த காப்பீடு குறித்து மேலும் பல விவரங்கள் சரியான நேரத்தில் பகிரப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் ஏற்படும் வேலை அனுமதி மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்களின் மருத்துவச் செலவுகளுக்கு முதலாளிகளே பொறுப்பாவார்கள். இந்தத் தொழிலாளர்களின் மருத்துவக் கட்டணங்கள் மெடிஷீல்டு லைஃப் மற்றும் மெடிஃபண்ட் போன்ற தேசியத் திட்டங்களின் கீழ் மானியம் அல்லது காப்பீடு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் மருத்துவக் கட்டணங்களைச் சிறப்பாக நிர்வகிக்க உதவவும் வகையில், அவர்கள் பணி அனுமதி மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் S$15,000 கவரேஜுடன் மருத்துவக் காப்பீட்டை வாங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இதற்கு முன் இருந்த நடைமுறைப்படி, S$70,000 மருத்துவப் பில்லுக்கு, காப்பீட்டாளர் முதல் S$15,000ஐ காப்பீடு செய்வார், மீதமுள்ள S$55,000ஐ முதலாளி ஏற்றுக்கொள்வார்.

இப்போது, இந்த மருத்துவக் காப்பீட்டின் மூலம், காப்பீட்டாளர் முதல் S$15,000ஐ முழுமையாகப் செலுத்துவார். அதன் பிறகு மீதமுள்ள S$55,000க்கு, காப்பீட்டாளர் 75 சதவீதத்தை செலுத்த, அதன் பிறகு மீதமுள்ள தொகையை முழுமையாக அந்த முதலாளி செலுத்துவார். இந்த உயர்த்தப்பட்ட வருடாந்திர உரிமைகோரல் வரம்பு 99 சதவீதத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கான பிரீமியங்கள் 50 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வேறுபடுத்தப்படும்.வெளிநாட்டு தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், பிரீமியத்தை கட்டுப்படியாகக் கூடியதாக வைத்திருப்பதற்காக இது செய்யப்படுகிறது என்று டாக்டர் கோ கூறினார்.

24 மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாய் நின்று.. தன் “என்ஜினியரிங்” கனவை விடாமல் துரத்தி சாதித்த சிங்கப்பூர் பெண்

அதே சமயம் MOM இந்த மருத்துவ காப்பீட்டில் சில நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவரீதியாகத் தேவையில்லாத நடைமுறைகள், தொழிலாளர்களின் குற்றச் செயல்களால் ஏற்படும் சிகிச்சைகள், சுயமாக ஏற்படுத்திய காயங்கள் மற்றும் பாலுறவு நோய்கள் ஆகியவற்றுக்கு காப்பீடு செலுத்துவதில் காப்பீட்டாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts