TamilSaaga

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களே.. நீங்க என்ன சம்பளம் வாங்கினாலும்.. மாதம் ரூ.30,000 உங்களை நம்பி இருக்கும் வீட்டுக்கு அனுப்புவது எப்படி? – எல்லாம் நம்ம கையில தான்!

சிங்கப்பூருக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களை போலவே, பலர் இங்கு தங்கி படிக்க மற்றும் சுற்றிப்பார்க்க என்று பல நாடுகளை சேர்த்த பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் bachelors சிங்கப்பூரில் தங்கி தங்கள் நேரத்தை செலவிட, வேலைக்கு சென்றுவர என்ன செலவாகும் என்பதைத் தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

அதேபோல சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு செலவாகும், கிடைக்கும் சம்பளத்தில் மிச்சம்பிடித்து எவ்வளவு ஊருக்கு அனுப்பலாம் என்பதையும் காணலாம்.

சிங்கப்பூரில் வீட்டு வாடகை..

சிங்கப்பூரை பொறுத்தவரை எல்லாமே Flat அமைப்புகள் தான், தனி நபராக வரும்பொது நீங்கள் ஏற்கனவே சிலர் தங்கியிருக்கும் அறைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். குடும்பமாக வருபவர்களுக்கும் தனி வீடு நிச்சயம் கிடைக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலவரப்படி நீங்கள் ஒரு தனி வீட்டை வாடகைக்கு நீங்கள் எடுத்தால் 700 முதல் 900 வெள்ளி செலவாகும் (TV மற்றும் Wifi சேர்த்து). அதுவே நீங்கள் மற்றொருவருடன் இணைந்து ரூம் எடுத்து தங்கினால் 300 முதல் 500 வெள்ளி வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு Work Passல் பணி செய்ய வரும் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் Dormitoryகள் ஒதுக்கப்படும் என்பதும் நினைவுகூரத்தக்கது.

இருப்பினும் S Pass போன்ற பணி பாஸ்களில் வருபவர்கள் வெளியில் வீடு எடுத்து தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

உணவு

சிங்கப்பூரை பொறுத்தவரை தொழிலாளர்கள் தங்களது உணவு செலவுகளை அவர்களே தான் ஏற்க வேண்டும். வெகு சில நிறுவனங்களே உணவுகளை இலவசமாக தருகின்றது. ஆகையால் சிங்கப்பூரை பொறுத்தவரை வேலை செய்ய வருபவர்களுக்கு பெரிய செலவு என்றால் அது உணவு தான்.

சிங்கப்பூரை பொறுத்தவரை அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும் ஒரு சொர்க்கபூமி. ஸ்டார் ஹோட்டல்கள் துவங்கி Hawker Centre வரை அனைத்து வகை விலையிலும் உங்களால் சிங்கப்பூரில் உணவு உண்ண முடியும்.

ஒரு Hawker சென்டரில் நீங்கள் உணவு உண்டால் ஒரு நாளைக்கு 10 வெள்ளி முதல் 15 வெள்ளிவரை செலவாகும், ஆக மாதம் சுமார் 300 முதல் 500 வெள்ளி வரை உங்களுக்கு செலவாகும். அதேபோல நீங்களே கூட உணவுகளை சமைத்தும் ஆனால் நீங்கள் தங்கும் Dormitory அல்லது வீட்டில் சமைக்கும் அமைப்பும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியும் வேண்டும்.

நீங்களே சமைத்து உண்ணும் பட்சத்தில் மாதம் 350 வெள்ளியில் உங்கள் உணவு செலவுகளை உங்களால் சுருக்க முடியும்.

போக்குவரத்துக்கு செலவு

தொழிலாளர்களுக்கு அவர்களது ஓய்வு நேரத்தில் நிச்சயம் தேவைப்படும் ஒரு விஷயம் போக்குவரத்துக்கு, MRTமூலம் நீங்கள் பயணிக்கும்போது மாதம் 80 முதல் 100 வெள்ளி நிச்சயம் உங்களுக்கு போக்குவரத்தில் செலவாகும்.

மொபைல் Recharge

வெளிநாடு வரும் தொழிலாளர்களுக்கு அவர்கள் வீட்டுடன் தொடர்புகொள்ள ஒரே வழி மொபைல் தான். ஆகையால் இது ஒரு தவிர்க்க முடியாத அத்யாவசிய செலவு தான். நீங்கள் வீட்டில் தங்கியிருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இலவச Wifi கிடைத்துவிடும். ஆனால் Dormitoryயில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் நிச்சயம் ரிச்சார்ஜ் செய்தே ஆகவேண்டும்.

Singtel மற்றும் Star Hub என்று இரண்டிலும் உள்ள சேவைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நிச்சயம் அதற்கு மாதம் 30 வெள்ளி வரை செலவாகும். அதேபோல பொழுதுபோக்கு போன்ற இதர செலவுகளுக்கு நிச்சயம் 50 வெளியாவது உங்களுக்கு செலவாகும்.

வீட்டு வாடகை என்பது வெகு சில தொழிலாளர்களுக்கு மட்டுமே ஆகும் செலவு, ஆகவே அதை மட்டும் நீக்கி பார்க்கும்போது மாதம் உங்களுக்கு குறைந்தது 700 முதல் 900 வெள்ளி வரை சிங்கப்பூரில் செலவாகும். நீங்கள் குறைந்தது 1700 வெள்ளி சம்பளத்தில் நீங்கள் இங்கு வேலை செய்யும்போது குறைந்தது 800 வெள்ளி அதாவது 30,000 முதல் 40,000 வரை உங்களால் சேமிக்க முடியும் அதை உங்கள் வீட்டிற்கு அனுப்பவும் முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts