TamilSaaga

பல நாட்கள் கழித்து திறக்கப்பட “ஜூரோங்” – வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் கடைக்காரர்கள் சோகம்

தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக பூட்டுதலில் இருந்த ஜூரோங் மீன்பிடி துறைமுகம் தற்போது மொத்த விற்பனைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) காலை ஜூரோங் மீன்வள துறைமுகத்தில் ஒரு அமைதியான தொடக்கம் காணப்பட்டது.

இரண்டு வார மூடலுக்குப் பிறகு மொத்த மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. துறைமுகத்தின் வழக்கமான வாடிக்கையாளர் குழுவில் பாதி மட்டுமே இன்று காணப்பட்டதாக அங்கு ஸ்டால் வைத்திருப்பவர்கள் பிரபல செய்தி நிறுவனமான CNAவிடம் தெரிவித்தனர். இந்த ஜுரோங் துறைமுகத்தில் நான்கு ஸ்டால்களை வைத்திருக்கும் திரு. ஜேசன் லிம், காலை முழுவதும் வாடிக்கையாளர்கள் வராதது ஏமாற்றம் அளிப்பதாகவும் ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் துறைமுக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கினாலும், அனைத்து கடைகளும் இன்று வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 30 முதல் 35 சதவிகித தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மட்டுமே மீண்டும் தொழில் ஈடுபட இன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பல குத்தகைதாரர்கள் கடந்த மாதம் பெருந்தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்ததால், அவர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. “நாங்கள் மீண்டும் கடைகள் திறப்பது குறித்த கூடுதல் விவரங்களை சுகாதார அமைச்சகம் தரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம் என்று குத்தகைதாரர் ஒருவர் கூறினார்.

Related posts