TamilSaaga

இப்படியும் சிங்கப்பூரில் ஒரு மிருகம்… மருத்துவமனையில் நகர முடியாமல் படுக்கையில் கிடந்த பெண் நோயாளி – ஆடை சற்று விலகியிருக்க.. உள்ளே புகுந்து பலாத்காரம்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்துகொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவன், பணியில் இருந்தபோது அங்கு இருந்த ​​42 வயதான முற்றிலும் நகர முடியாமல் இருந்த பெண் நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பேசமுடியாத நிலையில் இருந்த அந்த பெண் தனக்கு நடந்த அந்த கொடுமை குறித்து அறிந்திருந்தால் என்றும் ஆனால் தனது உடல் ரீதியான இயலாமை காரணமாக அந்த கயவனை எதிர்க்க சக்தியற்றவளாக இருந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் 2 இளைஞர்களுக்கு கூரையை பிச்சுக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. அதுவும் இரண்டு முறை – திறமைக்கார பசங்கதான்!

இந்த வழக்கு குறித்து துணை அரசு வக்கீல் Ng Jun Chong கூறுகையில், ஒரு செவிலியர் அந்த கயவன் செய்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிடத்தில் அவன் அங்கிருந்து ஓடியுள்ளான், உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவன் கைது செய்யப்பட்டான் என்று கூறினார். 56 வயதான அந்த சிங்கப்பூர் நபர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (மார்ச் 23) தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

GAG ஆர்டர் காரணமாக மருத்துவமனை மற்றும் நோயாளி பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களும் அந்த நபரை பற்றிய தகல்வளை வெளியிடவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்வது மருத்துவமனையின் பெயரை வெளிப்படுத்தக்கூடும் என்பது நினைவுகூரத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி, அந்த துப்புரவுத் தொழிலாளி மருத்துவமனையின் தரையைத் துடைத்துக்கொண்டிருந்தபோது, ​​அருகில் முடியாமல் படுக்கையில் இருந்த பெண் இருப்பதை பார்த்துள்ளேன். அந்த பெண்ணின் மேலாடையில் இரு பட்டன்கள் போடாமல் இருந்ததை கண்டு உணர்ச்சிவசப்பட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய துவங்கியுள்ளான்.

“8.25 கோடி ரூபாய் பந்தயக் குதிரை”.. சிங்கப்பூரின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா டிம் டேவிட்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஏன் “முக்கியம்”?

இறுதியில் அருகில் இருந்த செவிலியர் அவனை கண்டு கூச்சலிட்டதும் அங்கிருந்து ஓடியுள்ளான், மனநலக் கழகத்தின் (IMH) மனநல மருத்துவர், அந்த நபருக்கு ஸ்கிசோஃப்ரினியா இருந்தபோதிலும், குற்றம் நடந்தபோது அந்த நபர் நல்ல மனநிலையில் தான் இருந்தார் என்று உறுதியளித்துள்ளார். இதனையடுத்து இன்று புதன்கிழமை, DPP Ng, மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோவை குற்றவாளிக்கு 24 முதல் 28 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விரைவில் அந்த நபரின் தண்டனை விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts