TamilSaaga

சிங்கப்பூர் வீட்டை விற்று மகளுடன் வாழ ஆசையாய் வெளிநாடு சென்ற தாய்.. தேவை முடிந்ததும் விரட்டிய பிள்ளை – சிங்கையில் வாழ வழிதெரியாமல் தவிக்கும் மூதாட்டி

தனது மகளுடன் மீண்டும் இணைவதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 82 வயதான சிங்கப்பூர் பெண்மணி, தன்னுடைய மகள் தன்னை பார்த்துக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் சிங்கப்பூர் வந்து வாழ வழியின்றி சிரமப்பட்டு வருகின்றார்.

ஷின் மின் டெய்லி நியூஸ் அளித்த தகவலின்படி, வயதான அந்த பெண் ஆதரவின்றி தற்போது சிங்கப்பூர் திரும்பியுள்ளார், மேலும் அவர் ஒரு ஹோட்டலில் தனியாக தங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும். அதன் பிறகு தான் தனது மகளுடன் தங்க முடிவெடுத்துள்ளார்.

56 வயதான தனது ஒரே மகள், திருமணமான பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்ததாகவும். மகள் ஆஸ்திரேலியா சென்றபிறகு நானும் என் கணவரும் ஆஸ்திரேலியா சென்றதாகவும் அவர் கூறினார்.

தனது கணவருக்கு கேன்சர் இருந்த நிலையில் தனது மகளின் அறிவுறுத்தலுக்கு பிறகுதான் சிங்கப்பூரின் Marine Crescent பகுதியில் இருந்த தங்களது நான்கு அறைகள் கொண்ட பிளாட்டை விற்றுவிட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளனர் அந்த தள்ளாத தம்பதியினர்.

பாலியல் குற்றம் செய்யும் எண்ணமே இனி வரக்கூடாது.. பாதிக்கப்படும் அனைவரையும் பாதுகாக்க “புதிய நடவடிக்கை” – அமைச்சர் சண்முகம் அதிரடி!

ஆஸ்திரேலியா வந்தபிறகு சுமார் 20,000 வெள்ளி செலவில் தனது மகளின் வீட்டில் ஒரு “Granny Flat” ஒன்றை தனது கணவர் கட்டியதாகவும் கூறப்படுகிறது. Granny Flat என்பது வயதானவர்களுக்காக கட்டப்படும் சிறிய அளவிலான ரூம்.

ஒரு காலகட்டத்தில் கணவர் இறக்க அதன் பிறகு தனது மகள் தன்னை கவனிப்பதை படிப்படியாக குறைந்துவிட்டார் என்று அந்த வயதான தாய் கண்ணீர்மல்க கூறிவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நான் என் மகளின் வீட்டிற்குள் நுழையும்போது எனது மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்டேன் என்றும் அதனால் எனக்கு காயங்கள் ஏற்பட்டது என்று அந்த மூதாட்டி வேதனையோடு கூறினார்.

தனுஷின் VIP பட பைக்கிற்கே Tough கொடுத்த சிங்கப்பூரர்.. ஒரே மாதத்தில் 2000 கிலோமீட்டர் பயணம் – தாய்லாந்தை சுற்றி வலம்வரும் ஒரு Free Bird

தேவையான அளவு பணத்தை பெற்றுக்கொண்டு பின் தன்னை ஒதுக்கிய மகளை விட்டுட்டு தற்போது சிங்கப்பூர் திரும்பியுள்ள அந்த மூதாட்டி ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார். ஒரே மகளை பெற்று நல்ல முறையில் வளர்த்து இறுதியில் தன் கணவனையும் இழந்து தனிமையில் தனது சிங்கப்பூர் உறவுகளின் உதவியால் தற்போது வாழ்ந்து வருகின்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts