TamilSaaga

Coretrade அடிக்க போறீங்களா… சிங்கப்பூரில் $1600 சம்பளம் தரும் இந்த கோர்ஸினை முடிக்கணுமா… மொத்தமா கேட்கும் Documents இது மட்டும் தான்!

சிங்கப்பூரில் பணி அனுபவத்தினை வைத்து செய்யப்படும் முக்கியமான கோர்ஸாக இருப்பது தான் Coretrade. இதனை அப்ளே செய்பதற்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கேட்பார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இதை தொடர்ந்து படிங்க.

சிங்கையில் வேலை செய்து வரும் ஊழியர்கள் 4 வருட பணி அனுபவம் இருந்தால் coretradeல் முதல் நிலை கோர்ஸினை முடிக்கலாம். அப்படி முடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் Skilled testன் வேலிடிட்டி முடியும் முன்னர் சிங்கப்பூரில் தொடர்ந்து வேலை செய்யும் முடிவில் இருந்தால் coretrade முடிக்கலாம். இந்த கோர்ஸினை முடித்து விட்டால் கம்பெனி உங்களுக்கு கட்டும் levy குறையும். உங்களின் சம்பளமும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் EPass… அப்ளே செய்ய என்னென்ன டாக்குமெண்ட்ஸ்… இதை தெரிஞ்சிக்கோங்க முத!

முதலில் இந்த கோர்ஸினை BCA அறிமுகப்படுத்தியதன் நோக்கம் கம்பெனி தரப்பில் கட்டப்படும் levy பாதியாக குறையும். basic skill முடித்து சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் Higher skill ஊழியராக உயர்த்தப்படுவார்கள். அவர்களால் சிங்கப்பூரில் தொடர்ந்து சில வருடங்கள் இருக்க முடியும். Higher skilled முடித்த இந்திய ஊழியர்களுக்கு லெவி மாதம் $300 சிங்கப்பூர் டாலர். ஒரு நாளைக்கு இதன் கட்டணம் $9.87 சிங்கப்பூர் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, basic skillல் இருக்கும் இந்திய ஊழியர்களுக்கு levy கட்டணம் $700 சிங்கப்பூர் டாலர்.

மேலும், CoreTradeல் 4 வருட சிங்கப்பூர் பணி அனுபவம் இருந்தால் Tradesmen முடிக்கலாம். இந்த கோர்ஸில் எழுத்து தேர்வு கிடையாது. foremen முடிக்க 6 வருட சிங்கப்பூர் பணி அனுபவம், coretradeல் Supervisor கோர்ஸ் முடிக்க 8 வருட சிங்கப்பூர் பணி அனுபவம் இருந்தால் முடியும்.

இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து கொண்டு சிங்கப்பூரில் வேலை தேடணுமா… Fresherஸ் கூட ஈசியா வேலை பிடிக்கலாம்… எந்த துறை பெஸ்ட்… Tips & Tricks!

coretradeக்கு ஆன்லைனில் பதிவு செய்ய பின்வரும் ஆவணங்கள் PDFஐ தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

  • சிங்கப்பூர் ஊழியரின் NRIC (சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் PRக்கு) அல்லது வேலிடிட்டி இருக்கும் வொர்க் பெர்மிட் (வெளிநாட்டவருக்கு)
  • Skill சான்றிதழ் (SEC/SEC(K) அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / கல்வித் தகுதி [முன்பு (SEC/SEC(K)) பெற்ற வெளிநாட்டு வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் இந்தச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை)
  • மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் Crane Operation Licence.
    உரிமம் பெற்ற அனைத்து Crane Operation Licenceம் இது கட்டாயமாகும்.
  • செல்லுபடியாகும் பிளம்பர் அல்லது எலக்ட்ரீசியன் உரிமம். உரிமம் பெற்ற பிளம்பர் அல்லது எலக்ட்ரீஷியன் அனைவருக்கும் இது கட்டாயம்.
  • விண்ணப்பதாரரின் சிங்கப்பூர் பணி அனுபவத்தை சரிபார்க்க மனிதவள அமைச்சகத்தின் இணையதளம் (WP ஆன்லைன்) மூலம் பெறப்பட்ட தொழிலாளியின் வேலைவாய்ப்பு விவரங்கள் (வேலை அனுமதி வைத்திருப்பவருக்கு). இது அனைத்து வெளிநாட்டு வேலை அனுமதி பெற்றவர்களுக்கும் கட்டாயமாகும்.

சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் திருப்பிச் செலுத்த முடியாத விண்ணப்பக் கட்டணமாக $15 செலுத்த வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தேவையான ஆவணங்களும் தெளிவாகவும் சரியாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும். தவறான ஆவணங்கள் காரணமாக முந்தைய சமர்ப்பிப்பு ஏற்கப்படவில்லை என்றால் புதிய விண்ணப்பம் செய்யப்பட வேண்டும்.

இந்த முறையில் தான் உங்களின் ஆன்லைன் coretrade விண்ணப்பம் ஆன்லைனில் இருக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts