TamilSaaga

இந்தியா – சிங்கப்பூர்: VTL பயணத்திற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? – அவை இல்லாமல் பயணிக்க முடியுமா?

சிங்கப்பூருக்கான VTL திட்டத்தின் மூலம் விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட் விற்பனை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி முதல் கடந்த ஜனவரி 20 இரவு 11.59 வரை முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் VTL திட்டம் மூலம் சிங்கப்பூருக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் VTL அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் அளிக்கப்பட்ட அளவில் தற்போது VTL Approval வழங்கப்படுவதில்லை.

“உனக்கு சம்பளம் கொடுக்குறதே நான்தான்யா” – சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை “ஆபாச” வார்த்தையில் திட்டிய இந்திய தொழிலாளர்

தற்போது இந்தியா உள்பட 24 நாடுகளுக்கு VTL சேவைகளை வழங்கி வரும் சிங்கப்பூர் மிகுந்த கவனத்துடன் அதற்கான approvalகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்த VTL திட்டத்தில் பயணிகள் சிங்கப்பூர் வர என்னென்ன ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்கள் இல்லையென்றால் ஒருவரால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரமுடியதா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்..

VTL Approval Copy

48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT PCR சோதனை முடிவு

செல்லுபடியாகும் Visa

12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ்

குறைந்தபட்சம் 6 மாதம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்

சிங்கப்பூர் Arrival RT PCR Payment பில்

SG Arrival Card Submission Copy

Travel Covid 19 Insurance

செல்லுபடியாகும் விமான டிக்கெட் நகல்

சிங்கப்பூரில் தங்கும் முகவரி

VTL வழியாக Visiting Pass மூலம் வருபவர்கள் நிச்சயம் Return Ticket வைத்திருக்க வேண்டும்

Visiting Pass மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் தவிர Work Permit, S Pass, E Pass மற்றும் Work Pass போன்ற பாஸ்களில் வருபவர்கள் return ticket மற்றும் இன்சூரன்ஸ் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட இந்த ஆவணங்கள் இல்லையென்றால் நிச்சயம் உங்களால் VTL மூலம் சிங்கப்பூர் வர இயலாது.

VTL-ல் மிக முக்கிய Update: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடிவுகாலம்.. ஏக்கத்தை போக்கும் BCA-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கவனிக்க… சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த சிங்கப்பூர் PR குடும்பத்தில் 12 வயதுக்கு மேல் உள்ள ஒருவர் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ள நிலையில் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆவணங்கள் இருந்தும் 12 வயதுக்கு மேல் உள்ள நிலையில் நிச்சயம் இரண்டு டோஸ் தடுப்பூசி என்பது அவசியமானதாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts