TamilSaaga

“உனக்கு சம்பளம் கொடுக்குறதே நான்தான்யா” – சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை “ஆபாச” வார்த்தையில் திட்டிய இந்திய தொழிலாளர்

சிங்கப்பூரில் பொது மக்கள் மது அருந்துவதற்கான தடை நேரம் இரவு 10.30 மணியோடு முடிவடையும் நிலையில், ஒரு காபி ஷாப்பில் பீர் பாட்டிலை அப்புறப்படுத்தச் சொன்ன காவல்துறையினரைத் திட்டியதற்காக ஒருவருக்கு கடந்த புதன்கிழமை (ஜனவரி 26) S$3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதுள்ள சஞ்சீவ் குமார் சிவராஜ் போலீஸ் அதிகாரியிடம் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே பீர் பாட்டிலை அப்புறப்படுத்துங்கள் என்று கூறி. “ஒருவகையில் உன்னுடைய சம்பளத்திற்கு நானும் பணம் செலுத்துகிறேன் “ASSHOLE” என்று தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

“கம்போடியா நாட்டில் வேலை வாய்ப்பு” : 20 நாட்களில் விசா, 70000 வரை சம்பளம் – 30.01.2022 தஞ்சையில் நேர்முக தேர்வு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அபராதத் தொகையை சஞ்சீவ் செலுத்தாவிட்டால், இரண்டு வாரங்கள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு பொது ஊழியரை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 23, அன்று இரவு, புக்கிட் பஞ்சாங் ரிங் ரோடு, பிளாக் 259ல் உள்ள ஒரு காபி ஷாப்பில் சஞ்சீவ் ஒரு குழுவினருடன் இருந்தார்.

சம்பவத்தன்று இரவு சுமார் 10.40 மணியளவில் காபி ஷாப்பில் இருந்த பெண் ஒருவர் போலீஸை அழைத்தார். இங்கு வந்த சில வாடிக்கையாளர்கள் நேரம் முடிந்தும் தங்களது பீர் பாட்டில்களை அப்புறப்படுத்த மறுபத்தமாகவும். அந்த இடத்தை விட்டு செல்லாமல் தொடர்ச்சியாக அங்கேயே இருப்பதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். அவர் அழைத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, மூன்று போலீஸ் அதிகாரிகள் அந்த காபி கடைக்கு வந்தனர். சஞ்சீவ் மற்றும் நான்கு பேர் ஒரு மேஜையில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர், மேலும் அவர்கள் ஒவ்வொருவரின் முன்னாள் பாதி பாட்டில் நிரம்பியிருந்த மது பாட்டில் இருந்தது.

அங்குவந்த மூன்று அதிகாரிகளில் ஒருவர், இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை என்றும், ஆகையால் பீர் பாட்டிலை அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். உடனே சஞ்சீவின் நான்கு தோழர்களும் பீரை ஒரு பையில் ஊற்றிவிட்டு அங்கிருந்து வெளியேற எழுந்தார்கள், ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து, சிகரெட்டைப் புகைத்தபடியே இருந்தார். இதனால் மீண்டும் பீரை அப்புறப்படுத்தும்படி போலீஸ் அதிகாரி கூற, ​​​​சஞ்சீவ் மறுத்து, அவர் விரும்பினால் அதை அவரே அப்புறப்படுத்தலாம் என்று அதிகாரியிடம் கூறினார்.

சிங்கப்பூர் – இந்தியா பயணம்.. எந்தெந்த Airlines-ல் எவ்வளவு Baggage கொண்டு செல்லலாம்? தடுமாற்றமின்றி Extra Baggage சேர்ப்பது எப்படி?

உடனே அந்த போலீஸ் அதிகாரி பொறுமையுடன், இது நீங்கள் வாங்கிய பீர் ஆகையால் நீங்கள் தான் அப்புறப்படுத்தவேண்டும் என்று கூற, உனது சம்பத்திற்கு நானும் பணம் அளிக்கிறேன் “asshole” என்று கூறி திட்டியுள்ளார். உடனே பணியில் இருந்த அதிகாரியை திட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts