TamilSaaga

சிங்கப்பூர்.. ரத்தான பயணம் : “என் குழந்தை தரையில் தூங்கினான்” – Scoot மற்றும் SIAவை கடுமையாக சாடிய வெளிநாட்டு பெண்

சிங்கப்பூர் வந்த ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையாளர், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகிய மூவரும், அவர்களது Scoot விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சாங்கி விமான நிலையத்தின் தரையில் அவர்களது இரவை கழிக்க நேரிட்டுள்ளது குறித்து தனது வருத்தத்தை காட்டமாக தெரிவித்துள்ளார். ஐரீன் கேசெல்லி என்ற அந்த பத்திரிகையாளர் தனது ட்விட்டரில் ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்களையும் குறை கூறியுள்ளார். தனது ட்விட்டர் பதிவில் தனது அனைத்து சம்பவத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்தியா – சிங்கப்பூர் பயணம் : விமான டிக்கெட் நீங்களே புக் செய்யலாமா? இல்லை Agent மூலம் புக் செய்வது நல்லதா?

கேசெல்லி என்பவர் தற்போது கிரீஸில் உள்ள ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது, அவருக்கு ஏற்பட்ட இந்த முழு சம்பவத்தையும் “வெட்கக்கேடானது” மற்றும் “குழப்பம்” நிறைந்தது என்று விவரித்த அவர், பனிப்புயல் காரணமாக ஏதென்ஸுக்கான விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) நள்ளிரவுக்குப் பிறகு தனது அவலநிலை குறித்து ட்வீட் செய்துள்ளார் அந்த பத்திரிகையாளர்.

தற்போது அமலில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் சாங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியவில்லை, மேலும் அங்குள்ள ஹோட்டல்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும் சாங்கி விமான நிலையத்தில் இருந்த “Ground ஊழியர்கள் எங்களை குறித்து கவலைப்படவில்லை” என்றும், ஏதென்ஸுக்கு செல்லும் வேறு விமானத்தில் அவர்களை அனுப்பவோ அல்லது மாற்று விமானத்தை முன்பதிவு செய்ய அவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

காசெல்லி தனது ட்வீட்களில், ஸ்கூட்டுடன் தனது விமான பயணத்தை முன்பதிவு செய்திருந்தாலும், அவர் SIAவையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். Scoot என்பது SIAன் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்.
Scoot மற்றும் SIAன் Ground பணியாளர்களுக்கு “ஒரு குழந்தையை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிக் கூட தெரியவில்லை” என்றும் இது குறித்து தான் “அதிர்ச்சியடைந்ததாகவும்” அவர் கூறினார். மேலும் எந்த விமான ஊழியர்களும் அவர்களின் நிலைமையைப் பற்றி விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இரண்டு விமான நிறுவனங்களும் தன்னிடம் பொய் சொன்னதாகவும், அதே விமானத்தில் இருந்து மற்றொரு ஸ்கூட் பயணி ஒரு ஹோட்டலில் அறையைப் பெறுவதைக் கண்டறிந்த பிறகு, குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தவறியதாகவும் கேசெல்லி குற்றம் சாட்டினார். இறுதியில் அவர்களுக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உங்களுக்கு மாற்று விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூற. மாற்று விமானங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று முன்பு அவர் கூறியிருந்தாலும், தற்போது தனக்கு வேறொரு ஐரோப்பிய நகரத்திற்கு விமானம் வழங்கப்படுவதாகவும், ஆனால் அங்கிருந்து ஏதென்ஸுக்கு இணைக்கும் விமானம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார்.

வியாழன் வரை ஏதென்ஸுக்கு மாற்று விமானங்கள் வழங்கப்படவில்லை என்று அவர் அர்த்தப்படுத்தியிருக்கலாம் என்று பல நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஒரு இரவுக்குப் பிறகும், அவர் இத்தாலிய தூதரகத்தை அழைத்த நிலையில், ஒரு ஹோட்டல் அறை கிடைத்தது என்று கேசெல்லி கூறினார். காசெல்லியின் விமானம் ஜனவரி 25 அன்று புறப்படத் திட்டமிடப்பட்டது என்றும், ஏதென்ஸில் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்றும் Scoot கூறியது.

சிங்கப்பூர்.. “Work Pass Holders” விவகாரம் : 175 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த MOM – என்ன காரணம்?

காசெல்லியின் ட்வீட்களுக்கு சாங்கி விமான நிலையமும் பதிலளித்தது, அந்த குடும்பத்திற்கான உணவு மற்றும் தங்குமிடங்களை ஸ்கூட்டே ஏற்பாடு செய்தது மற்றும் “மாற்று விமான விருப்பங்கள்” கொடுக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டியது. இந்த நிகழ்வு குறித்து சில ட்விட்டர் பயனர்கள் கேசெல்லியின் அவலநிலைக்கு அனுதாபம் தெரிவித்தாலும், மற்றவர்கள் மோசமான வானிலை காரணமாக மறுமுனையில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதால், விமானம் ரத்து செய்யப்பட்டது இது ஸ்கூட்டின் தவறு அல்ல என்று சுட்டிக்காட்டினர். ஏதென்ஸ் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் போது உங்களுக்காக ஒரு ஹோட்டலை ஏற்பாடு செய்வது scoot வேலையா? என்றும் பலர் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts