TamilSaaga

உடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கு முதல் முதலாக பள்ளியைத் திறந்த சிங்கப்பூரின் இரும்பு பெண்மணி காலமானார்!

சிங்கப்பூரில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு முதல் முதலாக பள்ளியை தொடங்கிய திருவாட்டி லீனா தம்பையா என்ற பெண்மணி வயது முதிர்வின் காரணமாக தனது 86வது வயதில் உயிர் நீத்தார். இவர் சிங்கப்பூரின் சிறந்த சமூக தொண்டராக அறியப்பட்டவர் ஆவார். உடல் குறைபாட்டின் காரணமாக பள்ளி செல்ல இயலாத பல குழந்தைகளுக்கு ஆதரவாக 1979 ஆம் ஆண்டு இவர் விளையாட்டு குழு ஒன்றை.

முதல் முதலாக ஏழு குழந்தைகளுடன் சிங்கப்பூரில் உள்ள தேவாலயத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது ஐநா சபையின் சமூக விருதினை 1983 ஆம் ஆண்டு பெற்றது. இதற்கு அடுத்த கட்டமாக அந்த குழுவானது ஆசிய மாதர் நல்வாழ்வு சங்க பள்ளிக்கூடம் என்ற பெயர் பெற்றது. தற்பொழுது இந்த பள்ளி ஆனது 400 மாணவர்களுக்கு உதவி புரியும் அளவிற்கு வளர்ச்சியினை எட்டி உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு காரணம் சிங்கப்பூரின் சிங்க பெண்ணாக அறியப்பட்ட திருவாட்டி லீனா ஆவார். மருத்துவரான இவரது மகனும் சிங்கப்பூரில் ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார். இவருக்கு இறுதி அஞ்சலியை சமூக ஊடகங்களில் பதிவிடும் பலரும் இவருடைய சேவையினை நினைவு கூர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts