TamilSaaga

VTL-ல் மிக முக்கிய Update: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடிவுகாலம்.. ஏக்கத்தை போக்கும் BCA-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிங்கப்பூரில் இந்த தொற்று காலத்தில் தீவு முழுவதும் அதிக அளவில் முடங்கிப்போயிருந்த கட்டுமானத் துறையில் தற்போது பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரின் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) நேற்று புதன்கிழமை (ஜனவரி 26) வெளியிட்ட தகவலில், கட்டுமானத் துறையில் இந்த ஆண்டு $27 பில்லியன் மற்றும் $32 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும், இது கடந்த 2019ம் ஆண்டு பதிவான அதே அளவாகும் என்று கூறியுள்ளது. மேலும் வரவிருக்கும் 2023 முதல் 2026 வரையிலான காலக் கட்டத்தில், திட்டமிடப்பட்ட தேவை என்பது ஆண்டுக்கு 25 பில்லியன் டாலர் முதல் 32 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் BCA தெரிவித்துள்ளது.

இந்தியா – சிங்கப்பூர் பயணம் : விமான டிக்கெட் நீங்களே புக் செய்யலாமா? இல்லை Agent மூலம் புக் செய்வது நல்லதா?

நேற்று புதனன்று BCA கருத்தரங்கில் பேசிய தேசிய வளர்ச்சிக்கான மாநில அமைச்சர் டான் கியாட் ஹவ், கட்டுமானத் தேவையின் தற்போதைய நிலையான நிலை மற்றும் கடந்த 2020 முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பணிகளின் பின்னடைவு ஆகியவை இத்துறையின் வளர்ச்சியை மேன்படுத்த மேலும் உந்துகின்றன என்று கூறினார். “வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகை தற்போது சீராக மேம்பட்டுள்ளது என்றும், BCA Braddell வளாகத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், மனிதவளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் “கடந்த ஆண்டு பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நாட்டிற்குள் தொழிலாளர்கள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் கடினமாக்கப்பட்ட நிலையை தற்போது உள்ள நிலையுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தற்போதைய மாதாந்திர வருகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

BCA தரும் புள்ளிவிவரங்கள்படி, 2021ம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் இருந்த வேலைக்கான கொடுப்பனவுகளின் முன்னேற்றம் என்பது சுமார் $26 பில்லியனில் இருந்து இந்த ஆண்டு $29 பில்லியன் முதல் $32 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்த கட்டுமான தேவையில் 60 சதவீதத்தை அல்லது சுமார் $16 பில்லியன் முதல் $19 பில்லியன் அளவிற்கு Public Sector பங்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை இந்த அளவில் இருக்க, Private Sector கட்டுமானத் தேவைகள் கடந்த 2021 உடன் ஒப்பிடும்போது $11 பில்லியன் முதல் $13 பில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, பழைய வளாகங்கள் மறுவடிவமைப்புக்காக காத்திருக்கும் அதே வேளையில், சிங்கப்பூர் அதன் சுற்றுலா துரையின் மறுமலர்ச்சிக்குத் தயாராகும் வகையில் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுவதால் வணிகத் துறையின் (Commercial Sector) தேவையும் தற்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் தற்போது கட்டுமானத் துறைக்கான வளர்ச்சி பொதுவாக பார்க்கும்போது நல்ல உற்சாகமான நிலையில் இருந்தாலும், அது இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தான் உள்ளது என்று BCA குழுவின் Strategic Planning and Transformation இயக்குனர் திரு தியோ ஜிங் சியோங் கூறியுள்ளார்.

BCA-Redas என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஜிங், சிங்கப்பூரில் தற்போது Omicron வேறுபாடு என்பது லேசானதாக காணப்படுகிறது என்றாலும், நிறுவனங்கள் அவ்வாறு அவற்றை எடுத்துக் கொள்ளமுடியாது என்று கூறினார். Omicron மாறுபாட்டை கடினமான ஒன்றாக எடுத்துக் கொள்ளாவிடில் பாதிப்பு அதிக அளவில் ஏற்படும் என்று அவர் கூறினார். இதேபோல தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களை, உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற ஆலோசனை நிறுவனமான சுர்பனா ஜூரோங் குழுமத்தின் தலைமை நிர்வாகி திரு வோங் ஹெங் ஃபைன் கூறுகையில் “விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல், தொழிலாளர் மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் செலவு அழுத்தங்கள் ஆகியவை அதிக தலைவலி தரும் பிரச்சினைகளாக இருக்கின்றன” என்றார்.

சிங்கப்பூர்.. “Work Pass Holders” விவகாரம் : 175 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த MOM – என்ன காரணம்?

“கட்டுமான நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்க மாற்று கொள்முதல் அணுகுமுறைகளைப் உடனே கண்டறியவேண்டும் என்றும் திரு. வோங் கூறினார். எதுஎப்படி இருந்தாலும், சிங்கப்பூரில் இப்போது VTL கேட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளபோது Construction மற்றும் Marine துறைகளை சேர்ந்தவர்களுக்கு VTL மூலம் சிங்கப்பூர் செல்ல தற்போது அனுமதியில்லை. Work Permit card, IPA வைத்திருப்பவர்களில் SERVICE மற்றும் MANUFACTURING என்று இருந்தால் அவர்கள் மட்டுமே இப்போது VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

VTL மூலம் கட்டுமானத் துறைகளில் பணியாற்றுபவர்கள் இப்போது சிங்கப்பூர் செல்ல முடியாத சூழல் இருக்கும் போது, சிங்கப்பூரின் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) Construction துறையில் அதிகளவு ஆட்கள் தேவை இருப்பதை அறிவித்திருப்பது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், மிக விரைவில் கட்டுமானத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு VTL மூலம் சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts