TamilSaaga

Exclusive: “Refund” கிடையாது.. “Extra Baggage”க்கும் அப்பப்போ தடை – குளறுபடிகளை சரி செய்யுமா Air India Express?

அண்டை நாடான இந்தியாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக உள்ளூர் விமான சேவையை தவிர பன்னாட்டு விமான சேவைகளுக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அரசு ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்து உலகின் பல நாடுகளுக்கு சேவையை வழங்கி வருகின்றது.

வந்த பாரத் திட்டத்தின் கீழ் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும். அதேபோல பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான விமான கட்டணத்தை விட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பரவலான கருத்தை பயணிகள் முன்வைத்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து, பிறகு கேன்சல் செய்தவர்களுக்கு தற்போதுவரை Refund கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் குறிப்பிட்ட சில தேதிகளில் பயணிக்கும்போது பயணிகளுக்கு கூடுதல் சாமான்களை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பல சிரமங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பயணம் செய்யும் மக்கள் எதிர்நோக்கி வரும் நிலையில், விமான சேவையில் தனது குறைகளை நிவர்த்தி செய்யுமா? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற கேள்வி பயணிகளிடையே எழுந்துள்ளது.

Related posts