TamilSaaga

“அந்த இந்திய செவிலியர் மகளை நினைத்து துடித்தார்” : சிங்கப்பூரில் உயரும் செவிலியர்களுக்கான தேவை – ஏன்? பெருந்தொற்று படுத்திய பாடு என்ன?

சிங்கப்பூரில் தற்போது செவிலியர்களுக்கு அதிக அளவில் தேவை உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் பலர், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இங்கு செவிலியர்களாக வேலைக்கு வந்தவர்கள், தற்போது வெளியேறி வருகின்றனர். வீட்டில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் நிலை, கவலை மற்றும் சோர்வு, ஆகிய காரணிகள் தான் அவர்களை இங்கு ஒரு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்வதை விட சொந்த நாட்டில் குடும்பத்தோடு இருக்கும் முடிவை எடுக்க வைக்கின்றது என்று சக ஊழியர்கள் கூறுகின்றனர்.

Exclusive : “வெளிநாட்டு விமான பயணம்” : எந்தெந்த வழியில் உங்கள் Baggage தொலைந்துபோகும்? – அதை எப்படி திரும்பப்பெறுவது?

சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்து வரும் அடிப்படை பராமரிப்பு உதவியாளரான கரோலின் பேசுகையில், இங்கு பணியில் இருந்த அனைத்து வெளிநாட்டவர்களும், கடந்த 2021ம் ஆண்டில் Ng Teng Fong பொது மருத்துவமனையின் மறுவாழ்வு வார்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றார். அதே நேரத்தில் ஒருவர் இந்த ஆண்டு ராஜினாமா செய்துள்ளார் என்றும் ஆனால் கடந்த 2020ம் ஆண்டு யாருமே ராஜினாமா செய்யவில்லை என்ற தகவலையும் கூறினார். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், சுகாதாரப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விடுப்பு எடுப்பதைத் தடுக்கும் இடைநீக்கம் நீக்கப்பட்டது.

இருப்பினும் சுகாதார நெருக்கடியை கையாள்வதில் உள்ள கடுமை, இன்னும் சிலருக்கு பாரமாகவே இருந்தது. ஓரிரு வாரங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர்கள் திரும்பிச் செல்லலாம் என்றாலும், அடுத்த முறை அவர்கள் எப்போது திரும்பிச் செல்வார்கள்? என்ற கேள்வி எழுகின்றது என்று Ng Teng Fong பொது மருத்துவமனையின் Assistant Nurse Clinician குவோ சாசா கூறினார், அவருடைய பொறுப்பில் 17 செவிலியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய நாட்டை சேர்ந்த குவோ சாசா மேலும் கூறுகையில் அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த ஒரு செவிலியர் சொந்த நாட்டில் உள்ள தனது மகள் மீது கொண்ட கவலை காரணமாக தவித்து மீண்டும் நாட்டிற்கு திரும்பியதாக கூறினார்.

சிங்கப்பூர்.. அதிகாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ : இரு பெண்கள் மருத்துவமனையில் – 73 வயது முதியவர் கைது – ஏன்?

இந்த தொற்றுநோய் நீங்கள் நினைக்கும் அளவிற்கு எளிதானது அல்ல, N95 முகமூடிகளை தொடர்ந்து அணிவது தோலை எரிச்சலடைய செய்யும் அதேபோல மூக்கில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். கடந்த நவம்பரில் சுகாதாரத்துறையின் மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறுகையில், 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 1,500 சுகாதாரப் பணியாளர்கள் ராஜினாமா செய்தனர் என்றும், இது தொற்று நோய்க்கு முந்தய ஆண்டுகளில் வருடத்திற்கு 2,000மாக இருந்தது என்றார். மற்ற செவிலியர்கள் நீண்ட வேலை நேரம் மற்றும் கோவிட் -19 வந்துவிடுமோ என்ற பயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ராஜினாமா செய்தனர், கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளூர் செவிலியர்கள் தங்கள் மருத்துவமனை வேலைகளை விட்டுவிட்டு தடுப்பூசி மையங்களில் வேலை செய்யும் போக்கைக் கண்டதாக திரு ஓங் கூறுகிறார்.

மேலும் சிங்கப்பூரில் செவிலியர்கள், அடிப்படை பராமரிப்பு மற்றும் சுகாதார உதவியாளர்கள் தவிர, சுகாதார நிறுவனங்களும் நோயாளிகளின் சேவை கூட்டாளர்களை (PSAs) பணியமர்த்துவது சவாலாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts