வீட்டை கடிப்பாரு.. கல்யாணத்த நடத்திப்பாரு.. என்ற வரிகளை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். ஒரு நடுத்தர குடும்பத்துக்கு இது இரண்டுமே ஒரு மிகப்பெரிய சாதனை தான். தனக்கென்று காணிநிலம் இருந்தால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான். அளவில் சிறியதோ பெரியதோ நமக்கென்ற ஒரு வீடு தான் நமக்கு மிகசிறந்த மன நிறைவை தரும்.
ஆனால் வீடுகட்டுவது என்பது இன்றைய காலகட்டத்தில் சற்று சிரமம் இல்லை இல்லை மிகவும் சிரமமான ஒன்று தான். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு சொந்த வீடு என்பது இன்றளவும் கனவே. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிவோர் தங்களது தாயகத்தில் சொந்த வீடு கட்ட எப்படி NRI Housing Loanஐ வங்கியில் இருந்து பெறுவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
முதலில் NRI Housing Loan பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை முதலில் பார்க்கலாம்.
NRI வீட்டுக் கடன் பெற தேவையான ஆவணங்கள்:
முதலாவது உங்கள் Pass Port, அடுத்தபடியாக 6 மாதம் செல்லுபடியாகும் விசா, நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் வழங்கிய பணி ஆணை, அந்த நிறுவனம் உங்களுக்கு வழங்கும் அடையாள அட்டை, சிங்கப்பூர் அரசு வழங்கும் CBS ரிப்போர்ட், PAN கார்டு, ஆதார் அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் மற்றும் NRI வங்கி கணக்கு. NRI வங்கி கணக்கு இல்லை என்றால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் புதிதாக தொடங்கலாம்.
உங்கள் வருமானம் குறித்த ஆவணங்கள்
நீங்கள் வாங்கும் சம்பளத்தின் 6 மாத சம்பளவிவரம், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரித் தாக்கல், ஆறு மாத வங்கி அறிக்கை (Bank Statement) ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
உங்கள் சொத்து குறித்த ஆவணங்கள், வீடாக வாங்கும்பட்சத்தில் அந்த வீட்டின் தாய் பத்திரம், வாங்குபவரிடம் டாக்குமெண்ட் பெற்றுக்கொள்ளவேண்டும், வில்லங்கம் பெற்றுக்கொள்ளவேண்டும், சொத்து உரிமை ஆவணம், RC Report, Civil Engineer Value Report மற்றும், MOD ஆகிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் இருக்கும்பட்சத்தில் உங்களால் வெளிநாட்டில் இருந்தவாறு NRI Housing Loan பெறுவதற்கு வசதியாக இருக்கும்.