மாதம் 1ம் தேதி சம்பளம், 2ம் தேதி படுக்கையறை, 3ம் தேதி ஷாப்பிங், 4ம் தேதி பர்ஸ் காலி, 5ம் தேதி ‘இன்னமும் சம்பளமே போடல’ என்று குடும்பத்தாரிடம் பொய் சொல்வது… இது தான் இன்றைய தேதி வரை சிங்கப்பூரில் சில வெளிநாட்டு ஊழியர்களின் நிலையாக உள்ளது. மறுத்தாலும் இதுதான் உண்மை!
நமது சிங்கப்பூர் என்பது பல கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற ஒரு அழகிய தீவு. விஞ்ஞான ரீதியாகவும் அதே சமயம் இயற்கையையும் சரிசமமாக பேணி வளர்கின்ற அழகிய நாடு. சிங்கப்பூரார்கள் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்த பல தொழிலாளர்களுக்கு ஒரு தாய்நாடாகவே விளங்குகிறது நமது சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல. வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிசெய்து வருகின்றனர்.
தங்கள் சொந்த மண்ணை விட்டு இங்கே வந்து பணி செய்து தங்களது வாழ்கை தரத்தை உயர்த்தும் பல சிறந்த தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். அதே சமயத்தில் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை சூதாட்டம், மது போன்ற சில தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடும் சில வெளிநாட்டு தொழிலாளர்களும் சிங்கப்பூரில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம்.
சிங்கப்பூரில் பணியாற்றும் இந்தியர்கள் உள்பட சில வெளிநாட்டு பணியாளர்கள், சில அற்ப சுகங்களுக்காக மாதம் முழுவதும் தாங்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் பணத்தை பல தவறான வழிகளில் விரயம் செய்கின்றனர். இந்நிலையில் சூதாட்டம் மற்றும் மது போன்ற பழக்கங்கள் மட்டும் இல்லாமல் சிங்கப்பூரில் பணிபுரியும் பிறநாட்டு பணிப்பெண்கள் சிலருடன் இணைந்தும் தங்கள் பணத்தை வீணடிக்கின்றனர்.
பிறநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் பணிப்பெண்களுடன் நட்பு ரீதியாக பழகத்தொடங்கி பிறகு தங்கள் மொத்த வருமானத்தையும் அவர்களுக்காக செலவிடும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். பிழைப்பிற்காகவும் வாழக்கை தரத்தை மேன்படுத்துவதற்காகவும் பிற நாடுகளுக்கு உழைக்க செல்பவர்கள் இதுபோன்ற அற்ப சுகங்களுக்காக தங்கள் வாழக்கையையே தொலைத்துவிடுகின்றனர் என்பது உண்மை.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இப்படி சில வெளிநாட்டு ஊழியர்கள் இப்படி பெண்களால் பணத்தை சீரழித்த சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. சிங்கப்பூர் வருபவர்கள் யாரும் வசதி வாய்ப்போடு இங்கு வருவதில்லை. 99 சதவிகிதம் பேர் கடன் வாங்கித் தான் வருகின்றனர். அப்படி வருவோர், இப்படி பணத்தை சீரழிப்பது என்பது உண்மை வேதனையான விஷயம்.
குறிப்பாக, இந்தோனேசிய பெண்களிடம் தான் அதிகம் ஏமாறுகின்றனர். காதல் என்ற பெயரில் பணத்தை இழக்கின்றனர். சில இந்தோனேசிய பெண்கள், அப்பட்டமாக வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மீண்டும் சொல்கிறேன்… மாதம் 1ம் தேதி சம்பளம், 2ம் தேதி படுக்கையறை, 3ம் தேதி ஷாப்பிங், 4ம் தேதி பர்ஸ் காலி, 5ம் தேதி ‘இன்னமும் சம்பளமே போடல’ என்று குடும்பத்தாரிடம் பொய் சொல்வது… இது தான் இன்றைய தேதி வரை சிங்கப்பூரில் சில வெளிநாட்டு ஊழியர்களின் நிலையாக உள்ளது. மறுத்தாலும் இதுதான் உண்மை!
இங்கு சொல்லப்பட்டுள்ள செய்திக்கு மாற்று கருத்து உங்களுக்கு இருக்குமாயின் அதனை தாராளமாக சொல்லலாம்.