TamilSaaga

முப்பதாயிரம் பேர் தங்கும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பினை கட்டி முடித்த சைனா…மக்கள் தொகையினை சமாளிக்க புது டெக்னிக்!

இந்தியாவிற்கு முன்னோடியாக மக்கள் தொகையில் முன்னணி வைக்கும் நாடு சீனாவாகும். இந்நிலையில் உயர்ந்து வரும் மக்கள் தொகையினை சமாளிக்கும் வகையில் தற்பொழுது 30000 மக்கள் தங்கும் வகையில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பினை சைனா கட்டி முடித்துள்ளது. எஸ் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்து வருடங்களுக்கு முன்னர் சுமார் 20,000 பேர் வசித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது 36 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பாக இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு தற்பொழுது 30 ஆயிரம் பேர் வரை வசிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு பேர் ஒன்றாக இந்த குடியிருப்பில் வசிப்பதனால் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் குடியிருப்பு பகுதியில் உட்புறத்தில் உள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். மேலும், இந்த குடியிருப்பின் உட்பகுதியில் பெரிய உணவு விடுதி, நீச்சல் குளம், சலூன், சூப்பர் மார்க்கெட், கம்ப்யூட்டர் சென்டர் போன்ற பல வசதிகளும் உள்ளதாக தெரியவந்துள்ளன. எனவே தற்பொழுது இந்த கட்டிடம் ஆனது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

Related posts