TamilSaaga

“துறவியாக உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு” : மயக்கும் சிரிப்பில் சிங்கப்பூர் ஊடகங்களை புகழ்ந்த நடிகை Rui En

சிங்கப்பூரில் மிகப்பிரபலமான நடிகை தான் 40 வயதாகும் Rui En, பொழுதுபோக்கு துறையில் இருந்து தற்போது சற்று ஓய்வெடுத்துள்ள அவர் உள்ளூர் செய்தியாளர்களை மிகவும் கனிவாகப் பார்க்க தொடங்கியுள்ளார். ஷோபிஸில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நினைவுகூரும் Lianhe Zaobao உடனான நேர்காணலில், 40 வயதான அந்த நடிகை பல ஆண்டுகளாக அவர் எவ்வாறு வளர்ந்தார் என்பதைப் பற்றி கூறியுள்ளார். அந்த நேர்காணலில் அவர் தொட்ட தலைப்புகளில் ஒன்று தான் “உள்ளூர் ஊடகம்”, வெளிநாட்டு நிருபர்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் நிருபர்கள் “மிகவும் அன்பானவர்கள்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : சிங்கபூருடைய பெருமையின் மையப் புள்ளி

கடந்த பல ஆண்டாளாக இந்த நடிகை குறித்து பல எதிர்மறையான செய்திகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்கது, அந்த சம்பவத்தில் இந்த நடிகை ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது தற்செயலாக அவரது வாகனத்தால் மோதிவிட்டு “நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். ஆனால் அவர் அதற்கு பிறகு அளித்த விளக்கத்தில் “நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நான் இங்கு தான் வசிக்கிறேன்.. ஆகையால் ஓடிவிடமாட்டேன்” என்று தான் நான் கூறினேன் என்று விளக்கமளித்தார்.

மேலும் அவர் Zaobao நேர்காணலில்பேசியபோது, “ஒரு பிரபலமாக, நாம் எதைச் செய்தாலும், அது நல்லதோ கெட்டதோ அதில் அதிகமான மக்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
“எனவே நீங்கள் ஒரு தவறு செய்தாலோ அல்லது போதுமான அளவு ஏதாவது செய்யாவிட்டாலோ, எல்லாமே இங்கு உற்று கவனிக்கப்படும் என்றார் அவர். மேலும் பேசிய அவர் “சிங்கப்பூர் ஊடகங்களுக்கும் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இடையே இது வித்தியாசம் உள்ளது என்றார். உண்மையில் நீங்கள் மிகவும் அன்பானவராகக் கருதப்படுகிறீர்கள் என்று கூறினார்.

நடிகை Rui En பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகிய நிலையிலும், மேலும் புறநிலைக் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்கக் கற்றுக்கொண்ட பிறகும்ஊடகங்கள் பற்றி தனது எண்ணத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. “சிங்கப்பூர் நிருபர்கள் உண்மையில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்று மெல்லிய புன்னகையோடு அவர் கூறினார். ஏனென்றால் நீங்கள் அனைவரும் மிகவும் கனிவானவர்கள் என்று அவர் கூறினார்.

நிருபர்களை எதிரியாகக் கருதுவதற்குப் பதிலாகவும், தனக்காக விஷயங்களை கடினமாக்குவதற்குப் பதிலாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்ற எண்ணத்தை ரூய் தற்போது கொண்டுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts