TamilSaaga

மனித முகத் தோற்றம் கொண்ட மீன்.. தனது உடலே தானே 10 மடங்கு ஊதிப் பெரிதாக்கும் ஆற்றல்!.. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி.. செம கிராக்கி!

ராமேசுவரத்தில் இருந்து மனித முகத் தோற்றம் கொண்ட பேத்தை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவை பதப்படுத்தப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய ஆசிய நாடுகளுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின் றன.

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு மனித முகத் தோற்றம் கொண்ட பேத்தை மீன்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க – சிங்கப்பூர் TOTO லாட்டரி… நேற்று (அக்.20) நடந்த குலுக்கலில் 6 அதிர்ஷ்டசாலிகளுக்கு 22 லட்சம் பரிசு – முதல்ல வீட்டுல வாங்குன கடனை எல்லாம் முடிச்சிடலாம்! வாழ்த்துகள்

அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து மனித முகத்தோற்றம் கொண்ட பேத்தை மீன்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த வகை மீன்கள் மீனவர்களால் பேத்தை அல்லது பேத்தையன் என்று அழைக்கப்படுகிறது. இவை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியில் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இந்த பேத்தை மீன்கள் மனித முகத்தோற்றத்தில் காணப்படும். கடல் நீர் அல்லது காற்றைக்கொண்டு தனது உடலை பத்து மடங்கு ஊதிப்பெரிதாக்கும் ஆற்றல் கொண்டது. எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இவ்வாறு செய்கின்றன.

சிங்கப்பூர் ‘சீ சிக்கன்’ என்ற பெயரில் இந்த மீன்கள் விற்கப்படுகின்றன. மாமிசப் புரதங்களில் மிகச் சிறந்தது மீன் புரதம் என்பதால் `சீ சிக்கன்’ என்ற பெயரில் இவை சிங்கப்பூரில் அழைக்கப்படுகிறது. ஆனால், இதில் விந்தை என்னவென்றால், தமிழகத்தில் இந்த மீன்கள் உணவாக பயன்படுத்தப்படுவதில்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts