TamilSaaga

“சிங்கப்பூர் Tampines பகுதியில் தீ” : மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் – 280 பேர் உடனடியாக வெளியேற்றம்

சிங்கப்பூரில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 29) காலை 4.40 மணியளவில் டம்பைன்ஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த குறிப்பிட்ட குடியிருப்பு வளாகத்தில் இருந்து சுமார் 280 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ பரவியதும் உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் அளிக்கப்பட்டது. SCDF சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்தது கொண்டிருந்தது, மற்றும் 10வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பு முழுவதுமாக எரித்துவிட்டது என்று SCDF தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

திருச்சி – சிங்கப்பூர் : மார்ச் மற்றும் ஏப்ரல் மாத புக்கிங் நடைபெறுகிறது – தரமான “OFFER” தரும் Scoot நிறுவனம்

தீயணைப்பு வீரர்கள் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க தேவையான கருவிகளை அணிந்து கொண்டு புகை மூட்டப்பட்ட பிரிவுக்குள் எச்சரிக்கையுடன் சென்றனர். முழு வீட்டையும் உள்ளடக்கிய இந்த தீ விபத்து, இரண்டு நீர் ஜெட் மூலம் முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்த நேரத்தில், அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்புவாசிகளை வெளியேற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீக்கு நேர் மேலே உள்ள வீடுகளுக்குள் நுழைந்தனர், அப்போது தரையில் ஒரு பெண் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர்.

பணியாளர்கள் உடனடியாக அந்த பெண்ணை அந்த வீட்டில் இருந்து மீட்டு லிப்ட் லாபிக்கு கொண்டு சென்று அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் குழுவினரிடம் சேர்த்தனர் என்று SCDF வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது. மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு உடனடியாக CPR சிகிச்சை நடத்தப்பட்டு பின்னர் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டார்.

இதெல்லாமா TikTokல போடுவாங்க? – சிங்கப்பூரில் முதியவரை குளிப்பாட்டும் வீடியோவை TikTokல் போட்ட பணிப்பெண்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 280 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் அந்த பெண் இல்லாமல் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் ஆம்புலன்ஸ் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு புகையை உள்ளிழுத்த பிரச்சனைக்காக SGHக்கு அனுப்பப்பட்டார். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts