TamilSaaga

போலியாக வலம்வரும் குறுச்செய்தி – மக்களை எச்சரிக்கும் மனிதவள அமைச்சகம்

அண்மைக்காலமாக சிங்கப்பூர் மாற்றும் ஆசியா நாடுகள் பலவற்றுள்ள போலியான இணையதளங்கள் மூலம் மோசடி செய்யும் கும்பலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகத்தின் பெயரின் போலியான ஒரு தகவல் வலம்வருவதை அமைச்சகம் சுட்டிக்காட்டி மக்களை எச்சரிதித்துள்ளது.

மக்களுக்கு மனிதவள அமைச்சகத்தில் இருந்து வருவதுபோல வரும் அந்த குறுச்செய்தியில் ‘இன்னும் 4 மணி நேரத்தில் உங்களுடைய வாங்கி கணக்கு முடக்கப்படவுள்ளது. ஆகையால் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் தகவல்களை பதிவு செய்யுங்கள்’ என்று அந்த குறுச்செய்தியில் கூறப்படுகிறது.

ஆகையால் இதுபோன்று வரும் இந்த போலி குறுச்செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று, மேலும் அவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மனிதவள அமைச்சகம் மக்களை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல என்றும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைக்காகம் தெரிவித்துள்ளது.

மேலும் மக்கள் யாரும் இந்த போலியான குறுச்செய்தி பெற்ற நிலையில் உடனடியாக 1800 722 6688 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது மனிதவள அமைச்சகம்.

Related posts