TamilSaaga

எனக்கு இந்த நிறுவனத்தில் ஒரு வேலை கிடைக்காதா?.. தொழிலாளர்களை ஏங்க வைக்கும் சிங்கப்பூர் நிறுவனம் – படையெடுக்கும் Resumes

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும், வெற்றியும் என்பது அதன் முதலாளி முதலீடு செய்வதால் மட்டுமே அன்றி அங்கு பணி செய்யும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடும் உழைப்பினாலும் தான் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் இந்த பதிவில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் Motorola Solutions நிறுவனத்தை பற்றித்தான் பார்க்கவிருக்கிறேம்.

Motorola Solutions ஊழியர்களின் கூற்றுப்படி, சுமை இல்லாத பணிச்சூழல், பன்முகத்தன்மையைத் தழுவி தொழில்முறை, தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் அலுவலக கலாச்சாரம் ஆகியவையே அந்த நிறுவனத்திற்கு புதிய திறமைகளை ஈர்க்கவும் அவர்களை தக்கவைக்கவும் உதவுகிறது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட, இந்த பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம், Satista என்ற நிறுவனம் வழங்கும் Singapore’s Best Employers என்ற விருதுகளின் மூன்றாவது பதிப்பில், 200 சிறந்த நிறுவனங்களின் தரவரிசையில், 19 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே நிறுவனம் 20வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

“இந்த 2022 ஆண்டில் மட்டுமல்ல எங்களது Motorola Solutions நிறுவனத்தை எதிர் வரும் ஆண்டுகளிலும் எங்கள் பணியாளர்கள் வேலை செய்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்கிறார் MS நிறுவன சிங்கப்பூர் நாட்டின் மேலாளர் திரு. சாங் கார் வெங். குறிப்பாக இந்த பெருந்தொற்று எங்களுக்கு நிறைய படங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இது சிங்கப்பூரின் பெருமை.. ஜூரோங்கில் திறக்கப்பட்டது 5வது கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை – தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய சிங்கையின் “Master Stroke”

Statista செய்த ஆய்வில், Motorolo Solutions நிறுவன ஊழியர்கள் அளித்த தகவலின்படி “கடந்த 2015ம் ஆண்டு தொடக்கத்திலேயே தங்களது நிறுவனம் தொழிலாளர்களுக்கு ஏதுவான Work Culture கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது என்றும். தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த நிறுவனத்தை பரிந்துரைப்பதாக பரவலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தனது நிறுவன சமூகப் பொறுப்புகளின் ஒரு பகுதியாக, Motorola Solutions தனது வருடாந்திர உலகளாவிய மாத சேவை முயற்சிகள் மூலம் சமூக சேவைக்கும் தங்களது நேரத்தை ஒதுக்க ஊழியர்களை அனுமதிக்கிறது. மேலும் தங்கள் ஊழியர்களை மன அளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் பல முன்னெடுப்புகளை அந்த நிறுவனம் செய்து வருகின்றது.

திருமதி. வோங்-கைப் பொறுத்தவரை, தனது வாழ்க்கை தரம் தொடர்ந்து முன்னேற கடந்த 2017ல் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது ஒரு மிக முக்கிய காரணம் என்று கூறுகின்றார். அங்கு தலைமைத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான திட்டங்கள், LinkedIn Learning மற்றும் live webinars போன்றவை அனைத்து தங்கள் ஊழியர்களுக்கு கிடைக்கின்றது என்கிறார் அவர்.

Motorola Solutions நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தை பயிற்றுவிக்கிறது என்பதும் பலரும் பாராட்டும் ஒரு நிகழ்வாக உள்ளது. உண்மையில் தொழிலாளர்களை நேசிக்கும் இதுபோன்ற நிறுவனங்களைத் தான் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்தடுத்து கேட்ட வெடிப்புச்சத்தம்.. சிங்கப்பூர் Kusu தீவில் பரவிய பயங்கர தீ – SCDF வரும் முன்பே களமிறங்கி தீயை கட்டுப்படுத்திய “இயற்கை அன்னை”

உங்களுக்கும் இந்த நிறுவனத்தில் வேலைசெய்ய ஆசையாக இருந்தால் இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இந்த நிறுவனம் எந்த அடிப்படையில் வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு Try கொடுத்து பாருங்கள்

Related posts