TamilSaaga

சிங்கப்பூர் Expressway.. அதிவேகத்தில் சென்ற கார் : “Fishtailing” ஆனதால் தூக்கி வீசப்பட்ட Video – தொடர்ந்து எச்சரிக்கும் SPF

Fishtailing என்பதை பலரும் கேலிப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, அதி வேகத்தில் செல்லும் ஒரு வாகனம் அதன் ஓட்டத்தில் இருந்து சற்று விலகினாலும் அந்த வாகனத்தின் வேகத்தை பொறுத்து சாலையில் இருந்து அந்த வாகனம் தூக்கி வீசப்படும். பொதுவாக சிங்கப்பூர் சட்டத்தை பொறுத்தவரை Express போன்ற சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள் அதிகபட்சமாக 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் பலர் இந்த சட்டத்தை மதிப்பதில்லை. இந்த நிலையில் தான் நேற்று இரவு சாங்கி விமான நிலையம் நோக்கி செல்லும் Thomson சாலை அருகே மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

சிங்கப்பூர் Toa Payohவில் தீ விபத்து : தயவு செய்து “அதை செய்யாதீர்கள்” – பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் SCDF

சம்பவத்தன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெளிய வீடியோவில் வெள்ளை நிற Mercedes கார் ஒன்று சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் அருகில் சென்ற வாகனங்களை முந்தி செல்வதை காணமுடிந்தது. அதிக வேகத்தில் சென்ற அந்த கார் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து Road Dividerல் பாலமாக மோதி தரையில் இருந்து சில அடி தூரம் மேல் எழும்பி அதன் பிறகு சாலையில் மீண்டும் விழுந்தது.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” : சிங்கப்பூர் முதலாளி வழங்கிய போனஸ் – மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்ட தமிழக தொழிலாளி

இந்த விபத்தில் கார் வெடித்து எரிந்து முற்றிலும் நாசமானது, உள்ளே இருந்து 32 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் வெடிப்புக்கு முன்னரே காரை விட்டு வெளியேறியதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். Pan-Island Express பகுதியில் சாங்கி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள Thomson சாலைக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. தொடர்ச்சியாக சிங்கப்பூர் போலீஸ் படை மக்களை குறித்த இடங்களில் குறித்த வேகத்தில் வாகனங்களை இயக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts