TamilSaaga

சிங்கப்பூர்.. VTL விண்ணப்பங்களின் ஒதுக்கீடு : “அதை” பொறுத்துதான் அளிக்கப்படும் – High Commissioner வெளியிட்ட முக்கிய Update

சிங்கப்பூரும் மலேசியாவும் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் (VTL) வழியாக அதிக மக்கள் பயணிக்க அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் இரு நாடுகளிலும் தற்போதுள்ள COVID-19 நிலைமையைப் பொறுத்து இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மலேசியாவுக்கான சிங்கப்பூர் High Commissioner வானு கோபால மேனன் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். நிச்சயம் இந்த நிலை தான் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுடனும் அமல்படுத்தப்படும் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

“சிங்கப்பூர் Tampines பகுதியில் தீ” : மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் – 280 பேர் உடனடியாக வெளியேற்றம்

மேலும் வரவிருக்கும் மாதங்களில் இந்த ஒதுக்கீடு என்பது மேலும் அதிகரிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் திரு. மேனன் கூறினார். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நவம்பரில் விமான மற்றும் நில வழி VTLகளை அறிமுகப்படுத்தின. ஏர் VTL சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலும் அமலில் இருந்தது, அதே போல நில VTL காஸ்வே வழியாக பேருந்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், Omicron மாறுபாட்டின் பரவல் அச்சத்தின் மத்தியில் இரு நாடுகளும் டிசம்பர் 23 மற்றும் கடந்த ஜனவரி 20 2022 வரை VTL விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனைகளையும் முடக்கின.

இந்நிலையில் தற்போது ஜனவரி 21 முதல் விமான மற்றும் நில VTLகளில் டிக்கெட் விற்பனை முன்பு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. “நாங்கள் இப்போது இந்த ஒதுக்கீட்டை 50 சதவிகிதம் குறைத்துள்ளோம். எனவே அடுத்த கட்டமாக எண்களை அதிகரிக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். இது ஒரு தர்க்கரீதியான விஷயம் என்று நான் நினைக்கிறேன், ”என்று பெர்னாமாவின் தலைவருடனான சந்திப்பிற்குப் பிறகு திரு மேனன் கூறினார்.

திருச்சி – சிங்கப்பூர் : மார்ச் மற்றும் ஏப்ரல் மாத புக்கிங் நடைபெறுகிறது – தரமான “OFFER” தரும் Scoot நிறுவனம்

இந்த நிலை முன்பு இருந்ததைப் போலவே 100 சதவீதத்திற்குத் திரும்பவும், ஆனால் நாம் அதைச் தற்போது செய்ய முடியுமா என்பது எனக்குத் தெரியாது. விஷயங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ஜனவரி 7 அன்று, மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், VTL திறன் பற்றிய கூடுதல் மதிப்பீடுகள் “அடுத்த சில வாரங்களில்” செய்யப்படும் என்றார். சீனப் புத்தாண்டை முன்னிட்டு பயணத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் திரு. மேனன் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் COVID-19 நிலைமை குறித்து, திரு மேனன், தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான விதிகளை சிங்கப்பூரர்கள் கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts