TamilSaaga

ஆயுதப்படையில் புதிய தொழில்நுட்பங்கள் – அடுத்த தலைமுறைக்கு தற்காப்பு படையாக உருமாறும் என நம்பிக்கை

சிங்கப்பூர் ஆயுதப்படையில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல்கள் பகுப்பாய்வு மற்றும் மனித இயந்திரவியல் தொழில்நுட்பம் ஆகியன புதிதாக கொண்டுவரப்பட உள்ளன.

ஏற்கனவே ஆகாயப்படையில் இந்த தொழில்நுட்பங்கள் இயங்கி வருகின்றன. போர் விமானங்களில் ஆயுதங்களை துல்லியமாக பொருத்த இவை பயன்படுத்தப்படுகின்றன.

இதனுடைய முக்கிய சிறப்பியல்பு மூன்று பேர் சேர்ந்து செய்யும் வேலையை இனி இந்த தொழில்நுட்பம் மூலம் செய்ய ஒருவர் மட்டுமே போதும்.

இந்த ஆண்டின் பின் பகுதியில் இந்த தொழில்நுட்பங்கள் செயல்பாட்டுக்கு வரும். ரோந்துப் பணிகளுக்கு ஆளில்லாத விமானம் பயன்படுத்தப்படும் என்றும் இதனால் மனிதவள தேவையின் அளவு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்கால தலைமுறைக்கு ஆயுதப்படையானது உருமாற்றம் அடைந்து தற்காப்பு படையாக காத்து நிற்கும். 2040 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கினை எட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo courtesy : MINDEF

Related posts