TamilSaaga

“ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் 100 வெள்ளி மதிப்புள்ள CDC வவுச்சர்கள்” : எப்படி பெறுவது? – Step By Step விளக்கம்

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 130 மில்லியன் சிங்கப்பூர் டாலர் சமூக மேம்பாட்டு கவுன்சில் (CDC) வவுச்சர்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் லீ சியென் லூங் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 13) ஜூரோங் ஸ்பிரிங் கம்யூனிட்டி கிளப்பில் தொடங்கி வைத்தார். முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்த நாடு தழுவிய திட்டமானது, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 900 மில்லியன் வீட்டு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த 130 மில்லியன் சிங்கப்பூர் டாலர் திட்டத்தின் மூலம் சுமார் 1.3 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் 100 வெள்ளி மதிப்புள்ள டிஜிட்டல் CDC வவுச்சர்களை பெறுவார்கள்.

இதையும் படியுங்கள் : “ஒரு வாய் சோறு கொடுக்கலாம்ல”

பங்கேற்பாளர்கள் மற்றும் ஹார்ட்லேண்ட் வணிகர்களிடம் பயன்படுத்தக்கூடிய இந்த வவுச்சர்கள், டிசம்பர் 31, 2022க்குள் கோரப்பட வேண்டும் என்று ஐந்து CDC-களும் மக்கள் சங்கத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன. மேலும் இணைய வழியில் இந்த வவுச்சர்களை பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் மட்டுமே இணையதளத்தைப் அணுக வேண்டும் மற்றும் அவர்களின் சிங்பாஸ் மூலம் அந்த இணையத்தில் அவர்கள் உள்நுழைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. CDC வவுச்சர்களுக்கான Link, உரிமைகோருபவரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும், பின்னர் அவர் மற்ற வீட்டு உறுப்பினர்களுடன் வவுச்சர்களை டிஜிட்டல் முறையில் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த லிங்க் மூலம் CDC வவுச்சர் பதிவு செய்யலாம்

பெறப்பட்ட வவுச்சரைச் செலவழிக்க, குடியிருப்பாளர் CDC வவுச்சர்கள் இணைப்பைக் கிளிக் செய்து, பயன்படுத்த வேண்டிய தொகையைத் தேர்ந்தெடுத்து, பங்கேற்கும் வணிகரிடம் QR குறியீட்டைக் காட்டலாம். வவுச்சர்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து குடியிருப்பாளர்களுக்கு வழிகாட்ட, சமூக மையங்கள் மற்றும் கிளப்களில் தேவையான உதவி கிடைக்கும். இந்த விஷயத்தில் உதவக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் இல்லாத முதியவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் இல்லாத குடியிருப்பாளர்கள் அல்லது தங்கள் சிங்பாஸை அமைக்க அல்லது தங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டியவர்களுக்கும் தனித்தனியே உதவிகள் வழங்கப்படும் .

“மேலும், நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட CCகள் மற்றும் பொது நூலகங்களில் காணப்படும் SG டிஜிட்டல் சமூக மையங்களில் உள்ள உதவியாளர்கள், டிஜிட்டல் வவுச்சர்களைப் பெறுவதற்கு உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவி வழங்குவார்கள் என்று திங்களன்று வெளியான அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த வவுச்சர்கள் எங்கள் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளில் சிலவற்றைச் சமாளிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் தொற்றுநோய் காரணமாக போராடும் எங்கள் வணிகர்கள் மற்றும் ஹார்ட்லேண்ட் வணிகர்களுக்கு ஆதரவளிக்க முடியும்” என்று நம்புவதாக மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர்.திருமதி டெனிஸ் புவா
கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts