TamilSaaga

சிங்கப்பூருக்கு Driver வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த விவரங்களை தெரிந்து கொண்டு வாருங்கள்!

ஆசிய நாடுகளில் இருந்து பெரும்பாலான மக்கள் சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாக ஒவ்வொரு ஆண்டும் பலர் சென்று கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு செல்லும் வேலை தேடிகள் பல்வேறு வேலைகளை, வெவ்வேறு துறைகளில் செய்து கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோர் பெற வேண்டிய முக்கிய ஆவணம் வொர்க் பர்மிட். இந்த வொர்க் பர்மிட் இருந்தால் மட்டுமே உங்களால் சிங்கப்பூரில் குறிப்பிட்ட காலம் வேலை செய்ய முடியும். இந்த வொர்க் பர்மிட் பெறுவதற்கு நிறைய வழிமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் இருக்கின்றது.

சிங்கப்பூரின் இருக்கும் நிறுவனத்தினர் தங்களுடைய அலுவலகத்திற்கு பணிபுரிய வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என்றால் இந்த வொர்க் பர்மிட் மிகவும் அவசியம். வொர்க் பர்மிட் பெற்றவர்கள் சிங்கப்பூரில் அனைத்து விதமான சலுகைகளையும் அதாவது சிங்கப்பூர் குடிமக்களுக்கு இணையான சலுகைகளை பெற முடியாது. இது ஒரு குறுகிய காலகட்ட அனுமதியாகும். இதன் மூலம் நீங்கள் சில சலுகைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் அதுவும் சில ஆண்டுகளுக்கே.

ஆசியாவில் இருந்து அல்லது மற்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வொர்க் பர்மிட் பெற்று வருபவர்கள் கட்டுமானத்துறை, கப்பல் கட்டும் தளத்தில், உற்பத்தி துறை, பெட்ரோலியம் மற்றும் பெட்ரோல் கெமிக்கல் உற்பத்தி துறை, சேவை துறைகளில் மட்டுமே வேலை செய்ய முடியும். வொர்க் பர்மிட் மூலம் சிங்கப்பூருக்கு டிரைவர்களாக பணிபுரிய வருபவர்கள் பகுதி நேரமாகவும் அல்லது முழு நேரமாகவும் பணிபுரியலாம். பகுதி நேரம் மற்றும் முழு நேர பணிகளை செய்ய என்னென்ன விதிமுறைகள் உண்டு. யார் எது போன்ற வேலைகள் செய்ய முடியும்? பகுதி நேர வேலை இருப்பவர்கள் முழு நேரமாக மாற்றிக் கொள்ள முடியுமா? என்பது போன்ற சந்தேகங்களுக்கு இந்த பதிவு விளக்கம் அளிக்கும். வொர்க் பர்மிட் பெற்றவர்கள் கட்டுமானம், அப்பன் கட்டும் தளம் மற்றும் ப்ராசஸ் துறைகளில் பகுதி நேரம் மற்றும் முழு நேர டிரைவரக்களாக பணிபுரிய முடியும். ஆனால் சில விதிமுறைகளை உட்பட்டவர்கள் பணியாற்றலாம்.

பகுதி நேர டிரைவர்களாக பணியாற்ற, தொழிலாளிகள் வொர்க் பர்மிட் எடுக்கும்போது worker-cum-driver என்பது போல் எடுக்க வேண்டும். இது போன்று பகுதி நேர பணிகளுக்கு அப்ளை செய்வோர் குறைந்த வேலை நேரமே வேலை செய்ய வேண்டும். பகுதி நேர டிரைவர்களாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் கார்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் அதாவது கிளாஸ் 3 லைசன்ஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே ஓட்ட முடியும். கிளாஸ் 4 லைசன்ஸ் கீழ் வரும் டிப்பர் டக்கர் அல்லது கான்கிரீட் ட்ரக் போன்றவற்றை ஓட்ட முடியாது. முழு நேர டிரைவர்களாக பணியாற்ற விரும்புவர்கள் லாரி டிரைவர், trailer truck driver, heavy truck driver போன்ற வேலைகளுக்கு அப்ளை செய்ய வேண்டும். இந்தியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் பி ஆர் சி மூலமாக வருபவர்கள் முழு நேர டிரைவர்களாக பணி அமர்த்த முடியும் அவர்களுடைய குறைந்தபட்ச மாத வருமானம் 1500 டாலர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு முழுநேர டிரைவர்களாக பணி அமர்த்த படுபவர்கள் அவர்களுடைய வொர்க் பரமட்டில் குறிப்பிடப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். கனரக வாகனங்கள், பஸ்களை, மற்றும் வேறு வாகனங்களையும் ஓட்ட முடியாது.

இதுபோன்று பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ வேலை செய்பவர்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளிகள் சிங்கப்பூர் டிராபிக் போலீஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். வொர்க் பர்மீட்டில் குறிப்பிடப்பட்ட நாட்களுக்கு மட்டும் நீங்கள் வாகனங்களை இயக்க முடியும் அது மட்டும் இன்றி எது போன்ற வாகனங்களை பர்மீட்டில் குறிப்பிட்டிருக்கிறதோ அதை மட்டுமே ஓட்ட முடியும். நிறுவனத்தினர் 20 சதவீதத்திற்கு மேல் வெளிநாட்டு அதாவது NTS மற்றும் PRC டிரைவர்களை பணி அமர்த்த முடியும். ஒரு நிறுவனத்தின் 20 சதவீதம் பணியாளர்கள் பகுதிநேர முழு நேர, NTS மற்றும் PRC சார்ந்த பணியாளர்களாக இருக்க முடியும். அதற்கு மேல் ஒரு நிறுவனத்தில் இதுபோன்ற பணியாளர்களை நியமிக்க முடியாது.

இதுபோன்ற பகுதி நேர மற்றும் முழுநேர டிரைவர்களுக்கான பணிகளை எவ்வாறு விண்ணப்பிக்க முடியும். புது டிரைவர்களுக்கு, அதாவது வெளிநாட்டில் இருந்து எடுக்கப்படும் இவர்கள் ஒர்க்கர் கம் டிரைவர் என்கிற ஆப்ஷன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை டிரைவர் முழு நேர பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் லாரி டிரைவர், ட்ரெய்லர் டிரக் டிரைவர், ஹெவி ட்ரக் டிரைவர் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை நீங்கள் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விட்டு பின்னர் மாற்றிக்கொள்ள முடியுமா பலரின் சந்தேகங்கள்.

ஒருவேளை பகுதி நேர பணிகளுக்கு தேர்ந்தெடுத்தவர்கள் முழு நேரமாகவும், முழு நேர பணிகளுக்கு பகுதி நேரத்திற்காகவும் மாற்றி அமைக்க முடியும். Change workers occupation எனும் ஆப்ஷன் மூலமாக WP Online என்னும் இணையதளத்தில் மாற்றங்களை அப்டேட் செய்யலாம். எந்தவிதமான ஆக்குபேஷன் என்பதை மாற்றுவதோடு தொழிலாளர்களின் வருமானங்களை அப்டேட் செய்யவும் இந்த இணையதளத்தை பார்க்கவும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts