TamilSaaga

“சிங்கப்பூரில் பள்ளி தேர்வுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்” : கல்வி அமைச்சகம் வெளியிட்ட முழு அறிக்கை

சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் கடுமையான பாதுகாப்பு அளவுகோல்களுக்கு உட்பட்டு, கண்டிப்பாக இந்த ஆண்டு தேசிய தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் (SEAB) இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட விதியின் தொடக்கத்தில் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனை மூலம் அவர்கள் பெருந்தொற்றுக்கு எதிர்மறையாக சோதிக்க வேண்டும்.

மேலும் வீட்டில் ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) கருவிகளுடன் ஒரு சுய சோதனையை முடிக்க வேண்டும் மற்றும் தேர்வு நாள் வரை ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் எதிர்மறை சோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் தேர்வு நடைபெறும் இடத்திற்கான பயண ஏற்பாடுகள் தனியார் போக்குவரத்து அல்லது நடைபயணமாக இருக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் இடத்திற்கும் தேர்வு நடைபெறும் இடத்திற்கும் இடையில் நிறுத்தங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பள்ளிகள் குறிப்பிட்ட தாளை எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட வேண்டும், அதனால் தேர்வு இடம் முன்கூட்டியே தயாரிக்கப்படலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களால் பயன்படுத்தப்படும் அறைகள் மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக இருக்கும் மற்றும் தேர்வுகளுக்குப் பிறகு முற்றிலும் சுத்தம்செய்யப்படும்.

மாணவர்கள் தேர்வு அறையில் 3 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நிர்ணயிக்கப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் மீதமுள்ள மாணவர்களுக்கு திட்டமிடப்பட்ட தொடக்க நேரத்திற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் தேர்வுகளைத் தொடங்குவார்கள்.

இந்த நடவடிக்கைகள் தேர்வர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று MOE தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் தொடக்கப்பள்ளி லீவிங் தேர்வு மற்றும் N-, O- மற்றும் A- நிலை தேர்வுகளுக்கு பொருந்தும். மேலும் தொற்றுக்கு நேர்மறையாக இருப்பவர்கள் அல்லது தனிமைப்படுத்துதல் அறிவிப்பில் இருப்பவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

Related posts