TamilSaaga

சிங்கப்பூரில் முதியவர் மீது மோதிய “Lorry ஓட்டுநர் பாலகிருஷ்ணன்”.. அபராதம் விதித்து வாகனம் ஓட்ட தடையும் விதித்தது சிங்கை அரசு

சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 10) ஒரு லாரி ஓட்டுநருக்கு S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது, லோடிங் விரிகுடாவில் ஓய்வு பெற்றவர் மீது மோதி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

68 வயதான பாலகிருஷ்ணன் S சுப்பிரமணியம் என்ற நபருக்கு, கனரக வாகனங்கள் உட்பட 4, 4A மற்றும் 5 ஆம் வகுப்பு வாகனங்களை ஓட்ட 10 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவான செயலின் மூலம் மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் 14, 2021 அன்று காலை 11.50 மணியளவில் வேலியண்ட் இண்டஸ்ட்ரியல் கட்டிடத்தின் Loading மற்றும் Unloading பகுதியில் பாலகிருஷ்ணன் லாரியை ஓட்டிச் சென்றதாக நீதிமன்றம் கூறியது. மேலும் வாகனம் நிறுத்துமிடத்திற்காகக் காத்திருப்பதற்காக, கன்டெய்னர் சேஸின் அருகே அவர் லாரியை நிறுத்தியுள்ளார்.

அப்போது பாதிக்கப்பட்ட 61 வயதான ஓய்வு பெற்ற ஒருவர், அந்த பகுதியை சுற்றி நடந்து கொண்டிருந்தார், மேலும் லாரிக்கும் கன்டெய்னர் சேஸுக்கும் இடையில் இருந்த சிறிய இடத்தை கடந்த செல்ல முயன்றுள்ளார். அதே நேரத்தில், பாலகிருஷ்ணனும் தனது லாரியை Freeஆக இருந்த இடத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளார்.

ஆயுதமேந்திய வன்முறை.. “இந்திய வம்சாவளி சிங்கப்பூரர்” அதிரடி கைது.. பகீர் தகவலை வெளியிட்ட சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை!

அவர் அவ்வாறு செய்தபோது, ​பின்னோக்கி உள்ள இடத்தில் யாரேனும் உள்ளார்களா என்பதை கண்காணிக்க தவறிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர் தனது லாரிக்கும் கன்டெய்னர் சேசிக்கும் இடையில் நடந்து செல்வதை அவர் கவனிக்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் லாரியின் இடது பக்கம் மோதியதில் அந்த முதியவர் காயமடைந்தவர் உடனே மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு விலா எலும்பு முறிவு மற்றும் கல்லீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார், இந்நிலையில் துணை அரசு வழக்கறிஞர் ஆங் சியோக் சென் பாலகிருஷ்ணனுக்கு S$1,000 முதல் S$1,500 வரை அபராதம் மற்றும் வாகனம் ஓட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை மற்றும் கடுமையான காயத்திற்கு சமமானவை என்றும் அவர் கூறினார்.

குழந்தை மனசு கொண்ட திருடன் போல.. சிங்கப்பூரில் பொம்மை கடையில் திருடிய “வினோத திருடன்” – CCTV காட்சிகளை வெளியிட்டு ஆளை தேடும் நிறுவனம்

இந்நிலையில் பாலகிருஷ்ணன் S சுப்பிரமணியம் அவர்களுக்கு 1000 வெள்ளி அபராதம் மற்றும் கனரக வாகனங்கள் உட்பட 4, 4A மற்றும் 5 ஆம் வகுப்பு வாகனங்களை ஓட்ட 10 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts