TamilSaaga

சிங்கப்பூரில் குடியேற எல்லோரும் விரும்புவதற்கான ஆறு காரணங்கள் இதுதான்!

சுற்றுலாவோ அல்லது வாழ்விட மாற்றமோ தங்கள் நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு போற எல்லோருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த நாடு எப்படி இருக்கும்? அந்த நாடு மக்கள் எப்படி இருப்பாங்க? அதனுடைய அடிப்படை வசதிகள் எப்படி இருக்கும்? அரசாங்க விதிமுறைகள் எப்படியெல்லாம் இருக்கும்-னு ஆயிரம் கேள்விகள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும். 

ஆனாலும் அங்க போய் பார்க்க ஆசைப்படுவோம். அது மாதிரியான ஒரு நாடு தான் சிங்கப்பூர். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு அழகான நாடு. இங்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கறாங்க. தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாட்டை சுற்றிப்பார்க்க வந்த வண்ணம் இருக்காங்க.

அப்படி இந்த ஊருல என்னென்ன சிறப்புகள் இருக்கு? ஏன் இது தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய நாடுகளுள் ஒன்றா கருதப்படுது? நாம சிங்கப்பூர் போகணும்னா என்னென்ன அடிப்படை விஷயங்களை தெரிஞ்சுக்கனும்? என்பதையெல்லாம் பற்றி ஒரு சின்ன அறிமுகம் காண்போம்! 

முதலில் சிங்கப்பூர் அமைந்துள்ள இடம்! ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் மலேசிய நாட்டின் தென் முனையில் அமைந்துள்ள நாடு தான் சிங்கப்பூர். மொத்தம் 275 சதுரமைல் பரப்பளவு கொண்ட இங்கு ஏறத்தாழ 5 மில்லியன் மக்கள் வசிக்கிறாங்க. தீவு நாடான இங்கு வெப்பம் சற்று அதிகமாகத் தான் இருக்கும். பயப்பட வேண்டாம், அந்த வெப்பத்தை விட இந்த நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம், ஒவ்வொரு கட்டிடத்துலயும் அந்த வெப்பத்தை விட மேலாக குளிர்சாதன வசதிகள் அமைக்கப்பட்டு இருக்கும். 

இந்த நாட்டோட போக்குவரத்து வசதிகள் இன்னும் டாப்! ஒரு வேலை இந்த நாட்டை சுற்றிப்பார்க்க நீங்க வந்தா ரொம்ப சுலபமா எங்கும் போய் வருகிற அளவுக்கு அத்தனை போக்குவரத்தும் இங்க அமைஞ்சிருக்கு. 

ஆசிய நாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள முக்கியமான ஹாட் ஸ்பாட் நம்ம சிங்கப்பூர்! இங்க வாழுற பாரம்பரியமான மக்கள் பெரும்பான்மையா 4 கலாச்சாரத்தைக் கொண்டவர்களா இருப்பாங்க. அந்த அனைத்தும் ஆசிய கலாச்சாரம் எனவே கலாச்சாரங்களை அறிந்துகொள்ள கஷ்டம் இருக்காது! 

அடுத்தது மொழி! உலகம் முழுவதும் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கற மாதிரி இங்கும் ஆங்கிலம் பொதுவான மொழியா இருக்கு. அது தவிர வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழியா கொண்டிருப்பாங்க. மலாய், சீனமொழி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகள் இங்க பேசப்படுது. நீங்கள் எந்த நாட்டினரா இருந்தாலும் மொழி பிரச்சனை இங்க இல்லை. பொது வெளிகள் எங்குமே ஆங்கிலத்தில் தான் அறிவிப்பு பலகைகள் இருக்கும் மேலும்  அனைவரும் அடிப்படை ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். இங்கு அரசுக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் அவர்களது தாய் மொழியை கட்டாயம் கற்றுக்கொள்வர் எனவே அனைத்து மக்களும் பொதுவாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள். 

போக்குவரத்து! முன்னமே சொன்னது போல சிங்கப்பூர் போக்குவரத்து மிகவும் சிறந்ததா இருக்கும். இன்னும் சொல்ல போனால் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தான் உலகின் சிறந்த விமான நிலையமா பல வருடங்களா இருந்து வருது. 

உள்ளே நுழையும்போதே இங்கு உள்ள போக்குவரத்து வசதிகள் உங்கள வியக்க வைக்கறதா இருக்கும். பெரும்பான்மையான பொது போக்குவரத்துகள் பயன்படுத்த மிக எளிதாக இருக்கும். 70 சதவிகித்திற்கும் அதிகமான மக்கள் இங்கு உள்ள பொது போக்குவரத்துக்கு மிகச்சிறந்ததா இருக்குனு சொல்லி இருக்காங்க. 

இங்க உள்ள EZ-லிங்க் கார்டு தான் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்திற்கு டிக்கெட். ஏறும்பொழுதும் இறங்கும்போது இதனை ஸ்கேன் செய்தால் போதும் பயணத்திற்கான பணம் பிடித்தம் செய்யப்படும். இந்த கார்டு ரீசார்ஜ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே எப்பொழுதும் உங்கள் பயணம் எளிதாகவே இருக்கும். 

முக்கிய குறிப்புங்க! இறங்கும் பொழுது கார்டு ஸ்கேன் செய்ய மறக்க கூடாது. அப்படி மறந்துட்டிங்கன்னா அந்த முழு வழித்தடத்திற்க்கான மொத்த பணமும் பிடித்தம் செய்யப்படும். 

இது தவிர வாடகை டாக்சிக்களும் இங்கு உண்டு. சில டாக்சிக்கள் EZ-லிங்க் மூலம் பணம் செலுத்தும் வசதியும் கொண்டிருக்கு. இந்த EZ-லிங்க் கார்டு அருகில் உள்ள போக்குவரத்து அலுவலகங்கள், MRT-ல் உள்ள பெரும்பான்மையான பயணசீட்டு அலுவலகங்கள் மற்றும் சேவை அலுவலகங்கள் என எங்கும் வாங்க இயலும். 

இங்க தான் ஒன்னு நீங்க முக்கியமா தெரிஞ்சுக்கனும்! உங்களுக்கு குட்டி குட்டி க்யூட்-ஆன கார்ட்டூன்கள் பிடிக்குமா? உங்களுக்காக தான் Charm EZ-லிங்க். கீ செயின் மூலம் அழகான கார்டூன்களைக் கொண்டு இது அமைக்கப்பட்டிருக்கு. இது தான் இப்பலாம் Fashion!!

அடுத்ததா அங்க வாழுகின்ற மக்கள்: யாரும் நம்ம நாட்டை விட்டோ அல்லது நம்ம ஊரை விட்டோ போகும்பொழுது கூட ஒரு துணை இல்லாம போக மாட்டோம். அப்படி போக நேர்ந்தால் அங்க இருக்கும் மக்கள் எப்படி இருப்பாங்களோ எப்படி பழகுவாங்களோனு நாம் யோசிப்போம். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் சிங்கப்பூர்-ல் பல நாடுகளிலும் உள்ள மக்கள் வசிக்கறாங்க. பழகுவதற்கு எளிமையாகவும், பண்புடனும் இருக்கும் மக்களுக்கு மத்தியில் நீங்க உங்களுக்கான வட்டாரத்தை உருவாக்குவது பெரிய பிரச்னையா நிச்சயம் இருக்காது. 

 ஒருவேளை இது போன்ற அணுகுமுறை உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் ஆன்லைன் மூலம் பல குழுக்கள் உள்ளன. பல்வேறு நாடுகளைச் சார்ந்த லட்சக்கணக்கான மக்கள், வேலை தொடர்பாகவோ தங்கள் பொழுதுபோக்கின் நிமித்தமாகவோ ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதும் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வதும் இன்றும் நடைமுறையில் உள்ளது. 

பாதுகாப்பு! ஒரு நாட்டுல இருந்து இன்னொரு நாட்டுக்கு போற அனைவருக்கும் மிக முக்கியமான அவசியம் பாதுகாப்பு.  ஒவ்வொரு நாட்டுலயும் மக்களோட பாதுகாப்புக்காகவும் சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காகவும் பல சட்டங்கள் இருக்கும். சிங்கப்பூரிலும் மக்களுடைய பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில இருக்கு.

 சிங்கப்பூர் நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி சிங்கப்பூர் சட்ட ஒழுங்கில் தனிமனித பாதுகாப்பிலும் சிறந்த நாடாக அறிவிக்கப்பட்டு இருக்கு. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பிலும் சிறந்த நாடு என மலேசிய பெண் ஒருவரின் ஆய்வின்படி குறிப்பிடப்பட்டு இருக்கு. 

அங்கு உள்ள மின்சார ரயில்களில் இரவு நேர பயணம், வெளியில் செல்லும்பொழுது தனிமனித பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு என அனைத்திலும் சிறந்த நாடாக சிங்கப்பூர் திகழ்வதால் உங்களுக்கு பாதுகாப்பு குறித்த பயம் அவசியமே இல்லை. 

உணவுகள்: வெளிநாடுகளுக்கு நாம் பயணிக்கும்பொழுதோ அல்லது அங்கு வாழ எண்ணும்பொழுதோ நமது கலாச்சார உணவுகள் அங்கு கிடைக்குமா? அந்த நாட்டின் உணவுப் பழக்கம் நமக்கு ஒப்புக்கொள்ளுமா என்றெல்லாம் யோசிப்போம். மேலும் சுற்றுலா செல்லும் மக்கள் அங்கு உள்ள  விதவிதமான உணவுகளை ருசிச்சு பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்படுவாங்க. 

சிங்கப்பூர் பொறுத்தமட்டில் பல கலாச்சார உணவுகள் இங்கு கிடைக்கும். இங்கு வாழும் பிரதான மக்களுடைய உணவுகளான சீன உணவுகள், இந்திய உணவுகள் மற்றும் மலேசிய உணவுகள் போன்றவை அடிப்படை. மேலும் பல பெரிய உணவு விடுதிகளில் பல நாடுகளுடைய உணவுகள் கிடைக்கும். 

உங்க பட்ஜெட்டில் சாப்பிட கூடிய உணவுகளும் இங்கு ஏராளம் உள்ளன. ஹாவ்கெர் சென்டர் எனப்படும் உணவு பகுதிகளில் பல வகையான உணவுகள் மலிவு விலையில் கிடைக்கும். அது தவிர நீங்கள் எந்த வகையான உணவுப் பிரியரா இருந்தாலும் இங்க உங்களுக்கு சிறந்த உணவுகள் கிடைக்கும். அதுல சில பரிந்துரைகள் கீழே  உள்ளன. 

  • சிங்கப்பூரின் பிரியமான உணவான சில்லி க்ராப் (Chilli Crab – நண்டு) 
  • சாதம், ஹய்னான்ஸ் சிக்கன் மற்றும் லெமாக் 
  • லக்ஸா 
  • சார் குவே ட்யூ
  • மீன் குழம்பு (FIsh Head Curry) 
  • சாட்டே 
  • ஆய்ஸ்டர் ஆம்லெட் 

போன்ற பல சிறப்பான உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க! 

சிங்கப்பூருக்கு வரும் சொந்தங்கள் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்க. உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts