சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் நகரத்திற்கு சுற்றுலாவிற்காக சென்ற குடும்பம் அங்குள்ள நபரிடம் சண்டைக்கு சென்று மல்லுக்கட்டிய காட்சி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது குறித்து ஹாங்காங் செய்தி ஊடகங்கள் சம்பவத்தினை செய்தியாக வெளியிட்டுள்ளன. இதன்படி சிங்கப்பூரை சேர்ந்த குடும்பம் சுற்றுலாவிற்காக ஹாங்காங் சென்ற பொழுது டிசம்பர் 10ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணி அளவில் உணவு அருந்தி கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நபர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள் உணவு அருந்தி கொண்ட கொண்டிருந்த இடத்திற்கு அருகில் புகை பிடித்ததாக தெரிகின்றது. சிங்கப்பூரில் பொதுவாகவே பொது இடங்களில் மற்றும் உணவகங்களில் புகைபிடிக்க மாட்டார்கள். சிங்கப்பூரிலிருந்து சென்ற குடும்பத்திற்கு அது மிகவும் வித்தியாசமாக தெரியவே சிங்கப்பூர் குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மகன் ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் கடையிலிருந்து வெளியேறிய பொழுது ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த 54 வயதான நபர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவரின் தலையில் அடித்து விட்டு ஓடி உள்ளார். சிங்கப்பூர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அந்த நபரை துரத்தி சென்று மறித்தனர். அப்பொழுது சண்டை மிகவும் முற்றியதால் முற்றியதால் ஹாங்காங் காவல்துறையினர் நாலு பேரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து வெளியான வீடியோவில் மூன்று ஆண்களும் ஒருவருக்கொருவர் சண்டை இடுவது போன்ற காட்சி வெளியாகி உள்ளது. எனவே இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.