சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) லிப்டில் சிக்கிய மூன்று பேரை மீட்பதற்காக பேரிடர் தடுப்பு மேலாண்மை அதிகாரிகளின் உதவியுடன் அதன் மீட்புப் பணியாளர்களை அனுப்பியது.
Disaster Assistance and Rescue Team எனப்படும் பேரிடர் தடுப்பு மேலாண்மை அதிகாரிகள் மற்றும் SCDF படையினர், 1 உட்லண்ட்ஸ் சாலையில் இருந்து நேற்று மாலை 5.10 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது தளத்திற்கு இடையில் சிக்கிக் கொண்ட அந்த லிப்டின் மின் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை. அந்த லிப்ட் அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு சேவை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது மாடியில் இருந்து கயிறுகள் கட்டி அதன் மூலம் 2 மீட்பு குழுவினர் கீழ் நோக்கி இறங்கி சிக்கியிருந்த லிப்ட்டை அடைந்தனர். சுமார் 1.5 மணிநேரம் போராடி அந்த லிப்ட்டில் சிக்கியிருந்த மூவரையும் அவர்கள் மீட்டனர்.
லிப்ட்ன் மின் இணைப்பு கடைசிவரை சரிசெய்யப்படாமல் இருந்ததால் மூவரையும் கயிறு கடித்தான் SCDF குழு மீட்டது. சுமார் 2 மணிநேரமாக லிப்ட்டில் சிக்கியிருந்தது திகிலூட்டும் அனுபவமாக இருந்தது என்று அந்த மூன்று பெரும் கூறினார்.
அவர்களுக்கு காயங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதாக என்று மதிப்பீடு செய்தபிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து முழுத்தகவலையும் SCDF தனது முகநூலில் வெளியிட்டுள்ளது.